யுவ புரஸ்கார் விருதை பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் பற்றிய தகவல்கள்…!

Advertisement

Lakshmi Saravanakumar History in Tamil

தமிழில் நிறைய வகையான நாவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த நாவல் அனைத்தும் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை வைத்து தன்னுடைய கற்பனையால் உரைநடை போல உருவாக்கப்பட்டதாகும். அதுமட்டும் இல்லாமல் இந்த உலகத்தில் நடந்த பிழைகளை விழிப்புணர்வோடு எடுத்துக்காட்டும் நோக்கத்திலும் சில நாவல்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு வகையான நாவல்களும் சிறந்த கருத்தோடு எழுதப்பட்டுள்ளது. அத்தகைய நாவல் எழுத்தாளர்களில் ஒருவரான லக்ஷ்மி சரவணகுமார் என்பவரை பற்றிய தகவல்களை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்

லக்ஷ்மி சரவணகுமார் பற்றிய தகவல்:

லக்ஷ்மி சரவணகுமார்

லக்ஷ்மி சரவணகுமார் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் என்னும் ஊரில் பிறந்தார். அதன் பிறகு அவரது சொந்த ஊரிலே பதினொன்றாம் வகுப்பு வரை படித்தார். அதற்கு மேல் அவர் படிப்பை தொடரவில்லை.

சரவணகுமாருக்கு கவிதை மற்றும் கட்டுரை எழுதும் பழக்கம் இருந்தன. அதன் மூலமாகவே அவர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய தொடங்கினார்.

எஸ்.திருநாவுக்கரசுக்கு 25 வயதான பொழுது என்ற முதல் சிறுகதையை லக்ஷ்மி சரவணகுமார் எழுதி வெளியிட்டார்.

அதன் பிறகு கானகன் என்ற நாவலிற்கான யுவ புரஸ்கார் என்ற விருதையும் பெற்றார். அதனை தொடர்ந்து உப்பு நாய்கள் நாவலிற்காக சுஜாதா நினைவு விருதையும் பெற்றுள்ளார். 

இவர் எழுதிய மயான கண்டம் என்னும் கதை குறும்படமாக வெளிவந்தது அதன் மூலம் சினிமாவில் அங்கீகாரம் பதிக்க ஆரம்பித்தார்.

இப்போது லக்ஷ்மி சரவணகுமார் சினிமாவில் வசன எழுத்தாளராகவும் மற்றும் உதவி இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

Lakshmi Saravanakumar Novel:

  1. கானகன்
  2. நீலப்படம்
  3. கொமோரா
  4. உப்பு நாய்கள்
  5. ரூஹ்
  6. வாக்குமூலம்
  7. ஐரிஸ்
  8. ரெண்டாம் ஆட்டம்

லக்ஷ்மி சரவணகுமார் சிறுகதைகள்:

  • நீல நதி
  • யாக்கை
  • முதல் கதை
  • போர்க்குதிரை
  • வசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவை
  • மச்சம்

புத்தகங்களைக் காதலித்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement