கவிஞர் நா முத்துக்குமார் பற்றிய வரலாறு..!

na muthukumar history in tamil

நா.முத்துக்குமார் புத்தகங்கள்

நண்பர்களே வணக்கம் இன்றைய  பதிவில் அனைவருக்கும் பிடித்த ஒருவரை பற்றிய தகவலை தான் பார்க்க போகிறோம். பொதுவாக அனைவருக்குமே பிறக்கும் போதே எழுதும் திறன் படிக்கும் திறன் அனைவருக்குமே இருக்காது காரணம் ஒரு பிள்ளை நல்ல முறையில் வளர்வது அவர் அவர் வளர்ப்பில் தான் இருக்கிறது. அந்த வகையில் ஒரு பிள்ளையை வளர்க்குவதற்கு எப்படி என்பதற்கு ஒரு பெரிய முன்னுதாரமாக இருக்கிறார் நா.முத்துக்குமார்..! காரணம் அவரின் குழந்தை பிறந்ததிலிருந்து அந்த குழந்தை வளர்த்த விதம் வரை அவருடைய உயிர் பிரியும் சூழ்நிலையில் கூட அவருடைய குழந்தையை பற்றி கடிதம் எழுதியுள்ளார் நா.முத்துக்குமார். இதுவரை பற்றிய இன்னும் சுவாரசியமான தகவல்களை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

நா.முத்துக்குமார் வரலாறு:

இவர் ஒரு கவிஞர் என்ற ஒரு பெருமையை எப்போதும் வெளிக்காட்டியது இல்லை. இவர் பார்ப்பதற்கும் மிகவும் சாதாரணமான மனிதன் போல் இருப்பார். இவரை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.

இவர் கோடம்பாக்கம் ஒரு சைக்களில் சுற்றி கொண்டு இருத்தவர் போல் தான் இவர் எப்போதும் இருந்தார். தமிழ் திரையுலகில் இவரின் பாடல்கள் நகர்த்தி வேறு நிலைக்கு தள்ளி அமைக்க இவரின் பாடல்கள் இருந்தது. அந்த அளவிற்கு இவரின் பாடல்கள் உள்ளது.

இவர் கால் பாதிக்காத இடமே இல்லை. உதவி இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவல் ஆசிரியர், 12 ஆண்டுகளின் 1500க்கும் மேற்பட்ட பாடல்கள், தொடர்ந்து இரண்டு தேசிய விருந்து. 10 க்கும் மேற்பட்ட புத்தகம், 41 வயதிற்குள் என்ன செய்ய முடியுமோ அந்த அளவிற்கு அனைத்தையும் சாதனையாக செய்து முடித்தார்.

இவர் உதவி இயக்குனராக பாலு மகேந்திரன் அவர்களிடம் சேர்ந்தார். இவர்  தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா சேர்ந்து வெளியிட்ட பாடல்கள் தொடர்ந்து இவரை வெற்றி பாதைக்கு தள்ளியது.

இவர் பிறந்த ஊர்: காஞ்சிபுரம்

படிப்பு: B.SC இயற்பியல் MA தமிழ்.

பிறந்த தேதி: 1975 ஆம் ஆண்டு ஜூலை 12 தேதி பிறந்தார்

இவர் தந்தை பணி: அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியர்

விருதுகள்: 2 தேசிய விருதுகள்.

தாய்: சிறு வயதில் இறந்துவிட்டார் தாயும் அரசு பள்ளியில் பணியாற்றியவர் தான்

இறப்பு: ஆகஸ்ட் 14. 2016

இவருக்கு எப்படி திரையுலகில் இவ்வளவு ஆர்வம் வந்து என்றால் இவரின் தந்தை வைத்திருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். அதன் பின் அவருக்கு திரையுலகில் ஆர்வம் அதிகமானது. வாய்ப்பு கிடைத்தால் சினிமாவில் பணியாற்றலாம் என்று இருந்தார்.

இவர் MA படிக்கும் போதே வார இயல்களுக்கு தொடர்ந்து கவிதைகளை அனுப்பி வந்தார். அவ்வாறு எழுதிய ஒரே ஒரு கவிதை இலக்கிய துறையில் அவரை பிரபலமாக்கியது. அது தூர் என்ற கவிதை.

அந்த கவிதை கணையாழி ஆண்டு இதழில் வெளியானது. அந்த ஆண்டு மலரை வெளியீடு செய்யும் விழாவும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். அந்த விழாவில் நிறைய சினிமா துறையை சேர்ந்தவர்களும், இலக்கிய துறையை சேர்ந்தவர்களும் பங்கேற்று இருந்தார்கள்.

அந்த விழாவில் கவிஞர் ஜாம்பவான்கள் நிறைய பேர் பேசினார், அவற்றில் சுஜாத்தாவும் பேசினார். அப்போது அந்த மேடையில் நான் வசித்த தமிழின் சிறந்த 25 கவிதைகளில் தூர் என்ற கவிதையம் ஒன்று தெரிவித்தார். அந்த கவிதையை அவர் மேடையில் வாசித்தார். அந்த கவிதை எழுதியவர் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் சிறந்த 25 கவிதையில் இதுவும் ஒன்று என்றார் அப்போது 7 வது வரிசையில் அமர்ந்திருந்த முத்துகுமார் கையை உயர்த்த உடனே அவரை மேடைக்கு அழைத்தார். பின்பு 1000 ரூபாயை அவர் முத்துக்குமாருக்கு வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட முத்துக்குமார். அதிலிருந்து 500 ரூபாயை எடுத்து கணையாழி இதழுக்கு கொடுத்தார். அப்போது நா. முத்துக்குமாருக்கு வயது 21 தான். தூர் என்பது முத்துக்குமாருக்கு அடை மொழியாக மாறிப்போனது. இதனை தொடர்ந்து இவருடைய கவிதைகளை தொகுத்து சாரல் என்ற பதிப்பகத்தின் மூலம் வெளியிட முன்வந்தார் கவிஞர் அறிவு மதி.

இவ்வாறு பல பிரபலங்களில் இவருடைய ஒற்றை கவிதை இவரை பிரபலப்படுத்தியது. இதுவே இவர் செய்த சாதனைகளுக்கு தொடக்கமாக அமைந்தது.

நா.முத்துக்குமார் புத்தகங்கள்:

இவர் எழுதிய புத்தம்: 

 1. அணிலாடும் முன்றில்
 2. ஆனா ஆவன்னா
 3. என்னைச் சந்திக்க கனவில் வராதே
 4. கண்பேசும் வார்த்தைகள்
 5. கிராமம் நகரம் மாநகரம்
 6. குழந்தைகள் நிறைந்த வீடு
 7. நா.முத்துக்குமார் கவிதைகள்
 8. நா.முத்துக்குமார் நூல்கள்
 9. நினைவோ ஒரு பறவை
 10. நியூட்டனின் மூன்றாம் விதி
 11. பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
 12. பட்டாம்பூச்சி விற்பவன்.

தி. ஜானகிராமன் பற்றிய தகவல்கள்

இதுபோன்ற நாவல்களை பற்றி தெரிந்துகொள்ள novel writers