“குமாரன் ஆசான்” விருது பெற்ற எழுத்தாளரை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Nagulan Tamil Writer 

வணக்கம் நண்பர்களே..! நம் தமிழ் மொழியில் எத்தனையோ புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதில் ஆசான் விருது பெற்ற நகுலன் என்ற எழுத்தாளரை பற்றி உங்களுக்கு தெரியுமா..? தமிழ் மொழியின் அபூர்வமான எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவர் தமிழ் மொழியில் பல நாவல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் ஆங்கிலத்திலும் சிறுகதை, கவிதை, நாவல் விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற நூல்களை எழுதியுள்ளார். அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் நகுலனின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதையின் ஆசிரியர் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

நகுலன் வரலாறு:

Nagulan Tamil Writer 

இவர் 1921 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் டி.கே. துரைசாமி. இவர் தனது 14 ஆவது வயதில் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் என்னும் ஊரில் குடிபெயர்ந்தார்.

இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதுபோல, இவர் ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றார். நகுலன் அவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவர் கவிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், விமர்சகராகவும், பாடல் திரட்டுபவராகவும், நாவல் ஆசிரியராகவும் மற்றும் குறுகிய கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இத்தனை சிறப்புகளை படைத்த இவர் 2007 ஆம் ஆண்டில் இவ்வுலக வாழ்வை துறந்தார்.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றிய தகவல்கள்..!

நகுலனின் சிறப்புகள்: 

இவர் பழந்தமிழ் இலக்கியம் மற்றும் நவீன ஆங்கில இலக்கியம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். நகுலன் தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் மேற்கொண்டவர்.

நகுலன் அவர்கள் எழுதிய ஆங்கில படைப்புகளை இயற்பெயரிலும், தமிழ் படைப்புகள் புனைப் பெயரிலும் எழுதி வந்தார். அதாவது, தமிழின் சிறு பத்திரிகை இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட நகுலன் தனது கதைகளை நவீனன் மற்றும் நாயர் என்ற புனைபெயர்களில் எழுதி வந்தார்.

இவர் கவிதை எழுதுவது மற்றும் புகைப்படம் வரைவது போன்றவற்றில் திறமை பெற்றவராக இருந்தார். இவர் இயற்றிய “குருஷேத்திரம்” என்ற இலக்கியத் தொகுப்பு தமிழ் மொழியில் மிக முக்கியமானதாக போற்றப்படுகிறது.

நகுலன் அவர்கள் கவிதைகளை இயல்பு நடையில் எழுதுவதில் புகழ்பெற்றவர் என்று போற்றப்படுகிறார். அதுபோல இவர் எஸ். நாயர் என்ற புனை பெயரில் சில கதைகள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ளார். 

இவர் சாந்தோம் கம்யூனிகேஷன் சென்டர் விருது, குமாரன் ஆசான் என்ற விருது மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்களின் விளக்கு விருது போன்ற விருதுகளை இவருடைய நாவல்கள் பெற்று தந்தன.

புத்தகங்களைக் காதலித்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

நகுலன் நாவல்கள்: 

  1. நீலக்கல்
  2. குருஷேத்திரம்
  3. நினைவுப்பாதை
  4. நாய்கள்
  5. நவீன டைரீ
  6. முன்று கவிதைகள்
  7. ஐந்து கவிதைகள்
  8. கோட் ஸ்டான்ட் கவிதைகள்
  9. இவர்கள்
  10. குறுதி
  11. கிராமம்
  12. இரு நீண்ட கவிதைகள்
  13. வாக்குமூலம்
  14. நகுலன் கதைகள்
  15. நகுலன் கவிதைகள்
  16. நகுலன் கட்டுரைகள்
  17. கண்ணாடியாகும் கண்கள்
  18. ரோகிகள்
  19. வாக்குமூலம்
  20. மஞ்சள்நிறப் பூனை.
ரமணி சந்திரன் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement