Nanjil Nadan Biography in Tamil
நமது தமிழ் மொழியில் பல பிரபலமான சிறுகதைத் தொகுப்புகள் உள்ளன. அதில் ஒரு சிறந்த சிறுகதைத் தொகுப்பான தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள் என்ற சிறுகதையை எழுதி புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பற்றி உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றைய பதிவில் அவரின் வாழ்க்கை வரலாறு, அவர் படைத்த படைப்புகள் போன்றவற்றை பற்றி தான் விரிவாக பார்க்க இருக்கின்றோம்.
அதனால் இந்த பதிவை முழுதாக படித்து நாஞ்சில் நாடன் பற்றிய முழுவிரங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்=> கவி செம்மல் என்ற பட்டம் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
Nanjil Nadan Biography in Tamil:
நாஞ்சில் நாடன் டிசம்பர் 31, 1947-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீர நாராயணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தார். இன்றைய காலகட்ட நவீன இலக்கியத்தின் மிக முக்கிய படைப்பாளர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இவரின் இயற்பெயர் க.சுப்பிரமணியம் என்பது ஆகும். இவரின் துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம் என்பது ஆகும். இவர் வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார்.
ஆனால் தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். இவரின் படைப்புகள் நகைச்சுவையும், சமூகவிமர்சனமும் உள்ளதாக இருக்கும். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும்.
இவர் கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல் ஆகும். இவர் தனது தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள் என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் மிகவும் புகழ்பெற்றார்.
இவரின் மிக முக்கியமான அடையாளம் என்றால் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடையே ஆகும். தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர் பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கினார்.
படைப்புகள்:
புதினங்கள்:
- 1977 தலைகீழ் விகிதங்கள்
- 1979 என்பிலதனை வெயில்காயும்
- 1981 மாமிசப்படைப்பு
- 1986 மிதவை
- 1993 சதுரங்கக் குதிரை
- 1998 எட்டுத் திக்கும் மதயானை
சிறுகதை தொகுதிகள்:
- 1981 தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்
- 1985 வாக்குப்பொறுக்கிகள்
- 1990 உப்பு
- 1994 பேய்க்கொட்டு
- 2002 பிராந்து
- 2004 நாஞ்சில் நாடன் கதைகள்
- சூடிய பூ சூடற்க
- முத்துக்கள் பத்து (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு)
- கான் சாகிப்
- கொங்குதேர் வாழ்க்கை
இதையும் படியுங்கள்=> முதலில் இரவு வரும் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ஆதவன் பற்றிய சில குறிப்புகள்..!
கவிதை:
- 2001 மண்ணுள்ளிப் பாம்பு
- பச்சை நாயகி
- வழுக்குப்பாறை
- புளிக்கும் ஆப்பழம்
கட்டுரைகள்:
- 2003 நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
- 2003 நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
- நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை
- தீதும் நன்றும்
- திகம்பரம்
- காவலன் காவான் எனின்
- அம்பறாத்தூணி (கம்பராமாயணம் குறித்த கட்டுரை தொகுதி)
- அகம் சுருக்கேல்
- எப்படிப் பாடுவேனோ?
- 2015 கைம்மண் அளவு (குங்குமம் வார இதழ் கட்டுரைகள்)
விருதுகள்:
- 2010-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது இவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
- கனடாவின் இலக்கியத்தோட்டத்தின் 2012 -ஆம் ஆண்டுக்கான இயல்விருது தொராண்டோவில் இவருக்கு அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்=>குருதிப்புனல் என்னும் புதினத்தை எழுதிய தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய சில குறிப்புகள்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |