முதலில் இரவு வரும் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ஆதவன் பற்றிய சில குறிப்புகள்..! | Aadhavan Novel Writer History in Tamil

Advertisement

Aadhavan Novel Writer History in Tamil

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! நமது தமிழ் மொழியில் பல நல்ல நல்ல புத்தகங்கள் உள்ளது. அதில் ஒரு சிறந்த புத்தகமான முதலில் இரவு வரும் என்ற புத்தகத்தை எழுதி அதற்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆதவன் பற்றி உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றைய பதிவில் அவரின் வாழ்க்கை வரலாறு, அவர் படைத்த படைப்புகள் போன்றவற்றை பற்றி தான் விரிவாக பார்க்க இருக்கின்றோம்.

Aadhavan Writer History in Tamil:

Aadhavan Novel Writer History in Tamil

ஆதவன் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு சிறந்த எழுத்தாளர் அவர். இவரது இயற்பெயர் கே.எசு.சுந்தரம் ஆகும். இவர் 1960-யில் எழுத தொடங்கி  தமிழ் சிறுகதை உலகில் பல சிறந்த குறிப்பிடத்தக்க சாதனைகளை இவர் நிகழ்த்தியுள்ளார்.

இவரின் படைப்புகளின் ஒன்றான முதலில் இரவு வரும் என்ற சிறுகதை நூலிற்காக 1987 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது ஆதவனுக்கு வழங்கப்பட்டது.  

இவர் 1942 மார்ச் மாதம் 21-ஆம் நாள் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தார். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், பிள்ளைகள் சாருமதி, நீரஜா. ஆதவன் சில ஆண்டுகள் இந்திய இரயில்வேயில் பணியாற்றிய பிறகு, டெல்லியில் உள்ள ‘நேஷனல் புக் டிரஸ்டின்’ தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

ஆதவன் 1987, ஜூலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். மரணத்திற்கு பின்பு தான் இவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் “தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு” என்கிற கதை ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் வெளியிடப்பட்டது.

படைப்புகள்:

குறும்புதினம்:

  1. இரவுக்கு முன்பு வருவது மாலை (1974)
  2. சிறகுககள்
  3. மீட்சியைத் தேடி
  4. கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
  5. நதியும் மலையும்
  6. பெண், தோழி, தலைவி (1982)

சிறுகதை:

  1. கனவுக்குமிழிகள் (1975)
  2. கால் வலி (1975)
  3. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் (1980)
  4. புதுமைப்பித்தனின் துரோகம் (1981)
  5. முதலில் இரவு வரும் (1985)
  6. நிழல்கள்

புதினம்:

  1. காகித மலர்கள் (1977)
  2. என் பெயர் ராமசேஷன் (1980) என்பது வித்தாலி பூர்ணிகாவினால் என்ற பெயரில் உருசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானது.

நாடகம்:

  1. புழுதியில் வீணை

 கவி செம்மல் என்ற பட்டம் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement