கடலோர வீடு என்ற சிறுகதையின் ஆசிரியர் பற்றிய தகவல்கள்..!

Pavannan History in Tamil

தமிழில் சிறந்த நாவல் எழுத்தாளர்களில் ஒருவரான பாவண்ணன் அவர்கள் பற்றிய முழு விவரங்களையும் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். நாம் தமிழில் எழுத படிக்க ஆரம்பம் செய்த காலத்தில் இருந்து தமிழை பற்றி படித்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் தமிழில் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற பழமொழியில் கூறப்பட்டுள்ளது போல நாம் தமிழில் கற்க வேண்டியது நிறைய இருக்கின்றன. ஆகையால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் பற்றிய சிறப்புகள் பற்றி படித்து பயன்பெறலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ புத்தகங்களைக் காதலித்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

எழுத்தாளர் பாவண்ணன் பற்றிய தகவல்கள்:

பாவண்ணன் நாவல்கள்

பாவண்ணன் வளவனூர் என்ற கிராமத்தில் 1958 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி பிறந்தார்.

இவருடைய தந்தை பெயர் பலராமன் தயார் பெயர் சகுந்தலா ஆகும். பாவண்ணனுக்கு பெற்றோர் இட்ட பெயர் பாஸ்கரன் என்பதாகும்.

இவர் தனது சொந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பிறகு விழுப்புரம் அரசுக்கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்து பட்டமும் பெற்றார்.

பாவண்ணன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு சிறிது காலம் புதுச்சேரி தொலைப்பேசி அலுவலகத்தில் பணியாற்றினார். அதனை தொடர்ந்து இளம்பொறியியல் பணிக்காக தேர்வு செய்யப்பட்டு கர்நாடகாவிற்கு சென்றார். 

இதனை தொடர்ந்து பாவண்ணன் தமிழ் கதை எழுத தொடங்கினார். இதில் பெரும்புலமை பெற்று கவிதை, நாவல், கட்டுரை, சுயசரிதை போன்ற எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் சினிமா துறையிலும் நிறைய கதைகள் எழுதியுள்ளார். 

பாவண்ணன் அமுதா என்ற பெண்ணை மனம் முடித்தார். இவர் சாகித்திய அகாதமி விருது என 7-க்கும் மேற்பட்ட விருதினை பெற்றுள்ளார்.

ரமணி சந்திரன் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

பாவண்ணன் சிறுகதைகள்:

 • வேர்கள் தொலைவில் இருக்கின்றன
 • பாவண்ணன் கதைகள்
 • வெளிச்சம்
 • வெளியேற்றம்
 • நேற்று வாழ்ந்தவர்கள்
 • வலை
 • அடுக்கு மாளிகை
 • நெல்லித் தோப்பு
 • ஏழுலட்சம் வரிகள்
 • ஏவாளின் இரண்டாவது முடிவு
 • கடலோர வீடு
 • வெளியேற்றப்பட்ட குதிரை
 • இரண்டு மரங்கள்
 • பொம்மைக்காரி
 • பச்சைக்கிளிகள்
 • பாக்குத்தோட்டம்
 • கண்காணிப்புக் கோபுரம்
 • பிரயாணம்
 • ஆனந்த நிலையம்
 • கனவு மலர்ந்தது

பாவண்ணன் நாவல்கள்:

 • வாழ்க்கை ஒரு விசாரணை
 • சிதறல்கள்
 • பாய்மரக்கப்பல்
தி. ஜானகிராமன் பற்றிய தகவல்கள்

பாவண்ணன் எழுதிய கட்டுரைகள்:

 1. எட்டுத்திசையெங்கும் தேடி
 2. எனக்குப் பிடித்த கதைகள்
 3. ஆழத்தை அறியும் பயணம்
 4. தீராத பசிகொண்ட விலங்கு
 5. வழிப்போக்கன் கண்ட வானம்
 6. எழுத்தென்னும் நிழலடியில்
 7. மலரும் மணமும் தேடி
 8. இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள்
 9. நதியின் கரையில்
 10. துங்கபத்திரை
 11. ஒரு துண்டு நிலம்
 12. உரையாடும் சித்திரங்கள்
 13. வாழ்வென்னும் வற்றாத நதி
 14. ஒட்டகம் கேட்ட இசை
 15. அருகில் ஒளிரும் சுடர்
 16. மனம் வரைந்த ஓவியம்
 17. புதையலைத் தேடி
 18. கனவுகளும் கண்ணீரும்
 19. படகோட்டியின் பயணம்
 20. வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள் சில நினைவுகள்
 21. கதவு திறந்தே இருக்கிறது
 22. சிட்டுக்குருவியின் வானம்
 23. சத்தியத்தின் ஆட்சி – காந்திய ஆளுமைகளின் கதைகள்
 24. ஒரு சொல்லின் வழியாக
 25. எல்லாம் செயல்கூடும் – காந்திய ஆளுமைகளின் கதைகள்
 26. வற்றாத நினைவுகள்
 27. நான் கண்ட பெங்களூரு
 28. ஒன்பது குன்று
 29. என் வாழ்வில் புத்தகங்கள்
 30. மண்ணில் பொழிந்த மாமழை
 31. சென்றுகொண்டே இருக்கிறேன்
 32. தங்கப்பா – இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை நூல்
 33. விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம்
 34. எப்பிறப்பில் காண்போம் இனி

எழுத்தாளர் பாவண்ணன் கவிதைகள்:

 • குழந்தையைப் பின்தொடரும் காலம்
 • கனவில் வந்த சிறுமி
 • புன்னகையின் வெளிச்சம்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil