வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நேற்று மனிதர்கள் சிறுகதையின் ஆசிரியர் பிரபஞ்சன் பற்றி தகவல்கள்..!

Updated On: June 27, 2023 12:06 PM
Follow Us:
prabanjan history in tamil
---Advertisement---
Advertisement

எழுத்தாளர் பிரபஞ்சன்

தமிழை நாம் படிக்க ஆரம்பம் செய்த காலத்தில் இருந்து அதில் நிறைய புது புது தகவல்களை கற்க ஆரம்பித்து இருப்போம். அதில் நாம் செய்யுள் முதல் உரைநடை வரை ஓரளவு படித்து தெரிந்துக்கொண்டு இருந்து இருப்போம். அதற்கு அடுத்த நிலையில் கதை புத்தகங்கள் இது மாதிரி படித்து இருப்போம். ஆனால் நாம் தமிழ் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது “நேற்று மனிதர்கள்” என்று சிறுகதையின் ஆசிரியர் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ள போகிறோம். வாருங்கள் நண்பர்களே..! பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்⇒ புத்தகங்களைக் காதலித்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Prabanjan History in Tamil:

பிரபஞ்சன் நாவல்கள்

பிரபஞ்சன் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி புதுசேரியில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்பதாகும்.

பிரபஞ்சனின் தந்தை பெயர் வைத்தியலிங்கம் மற்றும் தாய் பெயர் அம்பஜாம்பாள் ஆகும்.

இவர் தனது சொந்த ஊரிலேயே பள்ளி படிப்பை முடித்தார். அதன் பிறகு கல்லூரி படிப்பை கரந்தையில் உள்ள கல்லூரியில் முடித்து பட்டமும் பெற்றார். அடுத்தாக தஞ்சாவூரில் ஆசிரியர் பணியை முதல் முதலில் தொடங்கினார். 

அதன் பின்பு பிரபஞ்சன் பிரமிளா ராணி என்ற பெண்ணை மணம் முடித்தார். இவர் ஆசிரியர் பணியை தொடர்ந்து ஆனந்த விகடன், குமுதம், நக்கீரன், மாலை முரசு மற்றும் குங்குமம் போன்ற வார இதழ்களில் பணியாற்றி தோராயமாக 45- ற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி முன்னேற்றம் அடைய தொடங்கினார்.

இவரது புத்தகங்கள் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடன், பிரெஞ்சு, இந்தி மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் சினிமா துறையிலும் அவரது படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

“இலக்கியச் சிந்தனை விருது” இது போன்ற 5-க்கும் மேற்பட்ட விருதுகளை பிரபஞ்சன் பெற்றிருக்கிறார்.

கடைசியாக பிரபஞ்சன் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21- ஆம் தேதி மரணம் அடைந்தார். 

இதையும் படியுங்கள்⇒ தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்

பிரபஞ்சன் நாவல்கள்:

  1. மானுடம் வெல்லும்
  2. வானம் வசப்படும்
  3. மகாநதி
  4. சந்தியா
  5. காகித மனிதர்கள்
  6. பெண்மை வெல்க
  7. காதலெனும் ஏணியிலே
  8. சுகபோகத்தீவுகள்
  9. திரை
  10. தீவுகள்
  11. நீலநதி
  12. பதவி
  13. முதல் மழை துளி
  14. மகாபாரத மாந்தர்கள்
  15. பூக்களை மிதிப்பவர்கள்
  16. பூக்கள் நாளையும் மலரும்

பிரபஞ்சன் குறுநாவல்கள்:

  • ஆண்களும் பெண்களும்
தி. ஜானகிராமன் பற்றிய தகவல்கள்

பிரபஞ்சன் சிறுகதைகள்:

  1. நேற்று மனிதர்கள்
  2. விட்டு விடுதலையாகி
  3. இருட்டு வாசல்
  4. ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
  5. அப்பாவின் வேஷ்டி
  6. சித்தன் போக்கு
  7. பிரபஞ்சன் சிறுகதைகள்
  8. தபால்காரர் பெண்டாட்டி
  9. அந்தக்கதவு மூடப்படுவதில்லை
  10. நாளைக்கும் வரும் கிளிகள்
  11. குயிலம்மை
  12. மரி என்கிற ஆட்டுக்குட்டி
  13. யாசுமின் அக்கா
  14. ருசி
  15. ஒரு மனுஷி
  16. கழுதைக்கு அஞ்சுகால்கள்
  17. ஒரு சினேகத்தின் கதை

பிரபஞ்சன் நாடகம்:

  • முட்டை
  • அகல்யா
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now