சின்னக் கமலா என்ற நாவலின் ஆசிரியர் ரா. கி. ரங்கராஜன் பற்றிய தகவல்கள்..!

Advertisement

Ra Ki Rangarajan History in Tamil

நாம் நிறைய வகையான தமிழ் எழுத்தாளர்கள் பற்றி தொடர்ந்து நமது பதிவில் படித்து வருகிறோம். அத்தகைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில் இன்று சின்னக் கமலா என்ற நாவலின் ஆசிரியர் ரா.கி. ரங்கராஜன் அவர்கள் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள போகிறோம். இவர் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர் நாவல், கதை மற்றும் கட்டுரை போன்றவற்றையில் தனக்கான ஒரு இடத்தை பெற்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல் சினிமா துறையிலும் இவரது பங்கினை வழங்கிருக்கிறார். மேலும் இவரை பற்றி நிறைய தகவல்களை பதிவை படித்து விரைவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ நேநோ சிறுகதையின் ஆசிரியர் சாரு நிவேதிதா பற்றிய தகவல்கள்..!

ரா.கி. ரங்கராஜன் பற்றிய தகவல்கள்:

ரா கி ரங்கராஜன் நாவல்கள்

ரா.கி. ரங்கராஜன் 1927– ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி பிறந்தார். இவருடைய சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். இவர் சம்ஸ்கிருத பண்டிதர் ஆவர்.

இவர் பள்ளி படிப்பை முழுவதுமாக முடித்து விட்டு அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் கல்லூரி படிப்பை முழுவதுமாக முடிக்காமல் பாதியிலேயே படிப்பை விட்டு விட்டார்.

ரா.கி. ரங்கராஜன் தனது 16 வயதிலேயே எழுத ஆரம்பித்தார். அதன் பிறகு 1946-ல் சக்தி மாத இதழில் உதவியாசிரியராக பணிப்புரிய தொடங்கினார். அதனை தொடர்ந்து கலாச்சாரம் என்ற வார இதழில் உதவியாசிரியராகவும் மற்றும் குமுதம் நிறுவனம் நடத்திய ஜிங்லி சிறுவர் இதழிலும் பணியாற்றினார்.

இவர் கமலா என்ற பெண்ணை மனம் முடித்தார். பின்னர் 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி இயற்கை எய்தினார்.

ரா.கி. ரங்கராஜன் நாவல்கள்:

  1. உள்ளேன் அம்மா
  2. ஊஞ்சல்
  3. ஒரு தாய், ஒரு மகள்
  4. தர்மங்கள் சிரிக்கின்றன
  5. நான் கிருஷ்ண தேவராயன் – 1
  6. நான் கிருஷ்ண தேவராயன் – 2
  7. படகு வீடு
  8. மூவிரண்டு ஏழு
  9. வயது பதினேழு
  10. புரொபசர் மித்ரா
  11. சின்னக் கமலா
  12. மறுபடியும் தேவகி
  13. பல்லக்கு
  14. அடிமையின் காதல்
  15. இது சத்தியம்
  16. முதல் மொட்டு
  17. அழைப்பிதழ்
  18. ராசி
  19. கையில்லாத பொம்மை
  20. ஒளிவதற்கு இடமில்லை (1,2)
  21. ஹவுஸ்ஃபுல்
  22. ஒரு தற்கொலை நடக்கப் போகிறது
  23. விஜி
  24. இன்னொருத்தி
  25. நாலு திசையிலும் சந்தோஷம்
  26. ஒரே ஒரு வழி
  27. பந்தயம் ஒரு விரல்
  28. ஹேமா ஹேமா ஹேமா
  29. அழைப்பிதழ்
  30. ஒரு தாய் ஒரு மகள்
  31. ஹவுஸ்புல்
ரமணி சந்திரன் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

ரா.கி. ரங்கராஜன் கதைகள்:

  • கன்னா பின்னா கதைகள்
  • காதல் கதைகள்
  • திக்-திக் கதைகள்
  • ட்விஸ்ட் கதைகள்
  • கோஸ்ட்
  • க்ரைம்

இதையும் படியுங்கள்⇒ அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதையின் ஆசிரியர் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement