தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பற்றிய சில குறிப்புகள்..!

Tamil Novel Writer Jodi Gurus Life History in Tamil

Tamil Novel Writer Jodi Gurus Life History in Tamil

நமது தமிழ் மொழியில் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. நம்மில் பலருக்கும் புத்தகம் படிப்பது என்பது மிகவும் பிடித்த ஒரு பொழுதுபோக்காக இருக்கும். அப்படி நீங்கள் படிக்கும் புத்தகத்தை எழுதிய எழுத்தாளரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றாவது சிந்தித்தது உண்டா..? அப்படி நீங்கள் சிந்தித்து இருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.

நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு தமிழ் எழுத்தாளர் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பற்றிய தகவலை தான் தெரிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதாவது அவரின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் மற்றும் பெற்ற விருதுகள் போன்ற தகவல்களை தான் அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் பற்றிய தகவல்..!

Novel Writer Jodi Gurus Life History in Tamil:

Novel Writer Jodi Gurus Life History in Tamil

ஜோ டி குரூஸ் 1963-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமமான உவரியில் பிறந்தவர். இவர் தனது உயர் கல்வியை திருநெல்வேலி புனித சவேரியார் பள்ளியில் முடித்தார்.

இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.

இதையும் படித்துப்பாருங்கள்=> கவி செம்மல் என்ற பட்டம் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

இவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவர். தற்போது சென்னை இராயபுரத்தில் வணிகக் கப்பல்களுக்கான ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இவர் நெய்தல் குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவு செய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் ஆவார். இவரது இரு புதினங்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவையே ஆகும்.

படைப்புகள்:

 1. புலம்பல்கள் (கவிதை) -2004 தமிழ்
 2. ஆழி சூழ் உலகு (நாவல்) -2004 தமிழ்
 3. விடியாத பொழுதுகள் (ஆவணப்படம்) 2008 தமிழ்
 4. கொற்கை (நாவல்)2009 |கொற்கை தமிழ்
 5. ஆழி சூழ் உலகு (நாவல்) தமிழ்
 6. TOWARDS DAWN (ஆவணப்படம்) 2009 தமிழ்
 7. எனது சனமே (ஆவணப்படம்) 2010 தமிழ்
 8. அஸ்தினாபுரம் (நாவல்) 2016 தமிழ்
 9. வேர்பிடித்த விளைநிலங்கள் (தன்வரலாறு)2017 தமிழ்
 10. இனையம் துறைமுகம் (ஆவணப்படம்) 2018 தமிழ்
 11. கவனம் ஈர்க்கும் கடலோரம் (கட்டுரைகள்) -2019 தமிழ்

மேலும் இவர் திரைப்படத்துறையிலும் பணியாற்றியுள்ளார். 2013-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

இதையும் படித்துப்பாருங்கள் => முதலில் இரவு வரும் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ஆதவன் பற்றிய சில குறிப்புகள்..!

விருதுகள்:

 1. இவரது கொற்கை என்ற புதினத்திற்காக 2013ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
 2. இவர் எழுதிய “ஆழி சூழ் உலகு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 3. கனடா இலக்கியத் தோட்ட விருது-2006,
 4. சுஜாதா-உயிர்மை விருது-2011 (கொற்கை),
 5. லூர்தம்மாள் சைமன் இலக்கிய விருது-2013,
 6. இலயோலா இலக்கிய விருது -2014,
 7. இலக்கிய வீதி அன்னம் விருது- 2014,
 8. உஸ்தாத் பிஸ்மில்லாகான் விருது-2015,
 9. திருவள்ளுவர் இலக்கிய விருது-2015

இதையும் படித்துப்பாருங்கள் =>குருதிப்புனல் என்னும் புதினத்தை எழுதிய தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய சில குறிப்புகள்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil