சஞ்சாரம் என்ற நாவலை எழுதிய தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பற்றிய குறிப்புகள்..!

Advertisement

Tamil Writer S.Ramakrishnan Life History in Tamil

நமது தமிழ் மொழியில் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் சில புத்தகங்கள் நமது மனதை கவர்ந்து இருக்கும். அவ்வாறு நமது மனம் கவர்ந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளரின் வாழ்க்கை வரலாறு பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று என்றாவது சிந்தனை செய்திருக்கிறீர்களா..? அப்படி சிந்தனை செய்தவர்களுக்கு நமது பதிவின் மூலம் தினமும் ஒரு தமிழ் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாறு பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சஞ்சாரம் என்ற நாவலை எழுதிய தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பற்றிய சில குறிப்புகள்..!

Writer S.Ramakrishnan Life History in Tamil:

Writer S.Ramakrishnan Life History in Tamil

எஸ். ராமகிருஷ்ணன் 1966- ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மமல்லாங்கிணறு என்ற ஊரில் பிறந்தார். இவரின் பெற்றோர் தந்தை சண்முகம், தாயார் மங்கையர்க்கரசி ஆவார்.

தற்சமயம் இவர் தனது மனைவி சந்திர பிரபா, குழந்தைகள் ஹரி பிரசாத், ஆகாஷ் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்டம் ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார்.

பணிகள்:

புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான நூல்கள், மற்றும் திரைக்கதை எழுதுதல் போன்ற பணிகளை ஆற்றி வருகின்றார்.

இதையும் படித்துப்பாருங்கள்=> தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் பற்றிய தகவல்

படைப்புகள்:

புதினங்கள்:

  1. உப பாண்டவம் (2000)
  2. நெடுங்குருதி (2003)
  3. உறுபசி (2005)
  4. யாமம் (2007)
  5. துயில் (2010)
  6. நிமித்தம் (2013)
  7. சஞ்சாரம் (2014) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்-2018)
  8. இடக்கை (2016)
  9. பதின் (2017)
  10. ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை (2019)
  11. மண்டியிடுங்கள் தந்தையே (2021)

சிறுகதைத் தொகுப்புகள்:

  1. வெளியில் ஒருவன், சென்னை புக்ஸ்
  2. காட்டின் உருவம், அன்னம்
  3. எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் பாகம் 1, 2 மற்றும் 3 (2014)
  4. நடந்துசெல்லும் நீரூற்று (2006)
  5. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை (2008)
  6. அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது (2010)
  7. நகுலன் வீட்டில் யாருமில்லை (2009)
  8. புத்தனாவது சுலபம் (2011)
  9. தாவரங்களின் உரையாடல் (2007)
  10. வெயிலை கொண்டு வாருங்கள் (2001)
  11. பால்ய நதி (2003)
  12. மழைமான் (2012)
  13. குதிரைகள் பேச மறுக்கின்றன (2013)
  14. காந்தியோடு பேசுவேன் (2013)
  15. என்ன சொல்கிறாய் சுடரே (2015)

இதையும் படித்துப்பாருங்கள்=> கவி செம்மல் என்ற பட்டம் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

கட்டுரைத் தொகுப்புகள்:

  1. விழித்திருப்பவனின் இரவு(2005)
  2. இலைகளை வியக்கும் மரம்(2007)
  3. என்றார் போர்ஹே(2009)
  4. கதாவிலாசம்(2005)
  5. தேசாந்திரி(2006)
  6. கேள்விக்குறி(2007)
  7. துணையெழுத்து(2004)
  8. ஆதலினால்(2008)
  9. வாக்கியங்களின் சாலை(2002)
  10. சித்திரங்களின் விசித்திரங்கள்(2008)
  11. நம் காலத்து நாவல்கள்(2008)
  12. காற்றில் யாரோ நடக்கிறார்கள்(2008)
  13. கோடுகள் இல்லாத வரைபடம் – உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள்
  14. மலைகள் சப்தமிடுவதில்லை(2009)
  15. வாசகபர்வம்(2009)
  16. சிறிது வெளிச்சம்(2010)
  17. காண் என்றது இயற்கை(2010)
  18. செகாவின்மீது பனி பெய்கிறது(2010)
  19. குறத்தி முடுக்கின் கனவுகள்(2010)
  20. என்றும் சுஜாதா(2011)
  21. கலிலியோ மண்டியிடவில்லை(2011)
  22. சாப்ளினுடன் பேசுங்கள்(2011)
  23. கூழாங்கற்கள் பாடுகின்றன(2011)
  24. எனதருமை டால்ஸ்டாய்(2011)
  25. ரயிலேறிய கிராமம்(2012)
  26. ஆயிரம் வண்ணங்கள்(2016)
  27. பிகாசோவின் கோடுகள்(2012)
  28. இலக்கற்ற பயணி(2013)

குழந்தைகள் நூல்கள்:

  1. ஏழு தலைநகரம் கதைகள் (2005)
  2. கிறு கிறு வானம் (2006)
  3. கால் முளைத்த கதைகள் (2006)
  4. நீள நாக்கு (2011)
  5. பம்பழாபம் (2011)
  6. எழுத தெரிந்த புலி (2011)
  7. காசு கள்ளன் (2011)
  8. தலையில்லாத பையன் (2011)
  9. எனக்கு ஏன் கனவு வருது (2011)
  10. வானம்
  11. லாலிபாலே
  12. நீளநாக்கு
  13. லாலீப்பலே (2011)
  14. அக்காடா (2013)
  15. சிரிக்கும் வகுப்பறை (2013)
  16. வெள்ளை ராணி (2014)
  17. அண்டசராசம் (2014)
  18. சாக்கிரடீஸின் சிவப்பு நூலகம் (2014)
  19. கார்ப்பனை குதிரை (2014)
  20. படிக்க தெரிந்த சிங்கம் (2016)
  21. மீசை இல்லாத ஆப்பிள் (2016)
  22. பூனையின் மனைவி (2016)
  23. இறக்கை விரிக்கும் மரம் (2016)
  24. உலகின் மிகச்சிறிய தவளை (2016)
  25. எலியின் பாஸ்வோர்ட் (2017)

இதையும் படித்துப்பாருங்கள் => முதலில் இரவு வரும் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ஆதவன் பற்றிய சில குறிப்புகள்

திரைப்படம் குறித்த நூல்கள்:

  1. பதேர் பாஞ்சாலி – நிதர்சனத்தின் பதிவுகள் (2006)
  2. அயல் சினிமா (2007)
  3. உலக சினிமா (2008)
  4. பேசத்தெரிந்த நிழல்கள் (2009)
  5. சாப்ளினோடு பேசுங்கள் (2011)
  6. இருள் இனிது ஒளி இனிது (2014)
  7. பறவைக் கோணம் (2012)
  8. சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் (2013)
  9. நான்காவது சினிமா (2014)
  10. குற்றத்தின் கண்கள் (2016)
  11. காட்சிகளுக்கு அப்பால் (2017)

மேலும் இவர் பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

விருதுகள்:

  1. தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது 2001
  2. ஈரோடு சிகேகே அறக்கட்டளை வழங்கிய சிகேகே இலக்கிய விருது 2008
  3. கோவை கண்ணதாசன் கழகம் வழங்கிய இலக்கிய விருது 2011
  4. சாகித்ய அகாதமி விருது (சஞ்சாரம் நாவல்-2018)

இதையும் படித்துப்பாருங்கள் =>குருதிப்புனல் என்னும் புதினத்தை எழுதிய தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய சில குறிப்புகள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement