Thi. Janakiraman Novels in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம். காம் பதிவில் தமிழில் நாவல்கள் எழுதி சிறப்பு பெற்றுள்ள தி. ஜானகிராமன் பற்றிய தகவல்கள் தெரிந்துக்கொள்ள போகிறோம். தமிழில் நாவல்களின் பெருமையை சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது. அந்த அளவிற்கு எழுத்தாளர்கள் புகழ் பதித்துள்ளனர். அத்தகைய எழுத்தாளர்களில் தி.ஜானகிராமனும் ஒருவர். அவருடைய நாவல் சிறப்பினை பற்றி இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்
தி. ஜானகிராமன் வாழ்க்கை வரலாறு:
- தி.ஜானகிராமன் பிப்ரவரி 28 1921 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் தேவக்குடி என்ற ஊரில் பிறந்தார்.
- இவர் தஞ்சாவூர் புனித பீட்டர் பள்ளியிலும், சென்ட்ரல் பிரைமரிப் பள்ளியிலும் தனது தொடக்கக் கல்வியை முடித்தார்.
- அதன் பிறகு 1929 முதல் 1936 வரை தனது உயர்நிலை பள்ளி படிப்பை கல்யாண சுந்தரம் உயர்நிலை பள்ளியில் முடித்தார்.
- பள்ளி படிப்பை முடித்து விட்டு கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், பி.ஏ என்ற பட்ட படிப்பை முடித்து விட்டு. அதன் பிறகு சென்னைக்கு சென்று தனது ஆசிரியர் பள்ளி பயிற்சியையும் முடித்து பட்டம் பெற்றார்.
- இவர் இசை, ஓவியம், நாடகம், நாட்டிய கலை, சமையல் கலை இவை அனைத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர்.
- தி.ஜானகிராமன் நவம்பர் மாதம் 1982 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் இயற்கை எழுதினார்
தி. ஜானகிராமன் ஆற்றிய பணிகள்:
- தனது படிப்பை முடித்து விட்டு அதன் பிறகு 10 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றினார்.
- அதன் பிறகு அகில இந்திய வானொலியில் 14 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
- அகில இந்திய வானொலியில் பணியாற்றிய போது ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
- அப்போது அவர் ஜப்பான் சென்று வந்த பிறகு அந்த அனுபவங்களை வைத்து உதய சூரியன் என்ற தலைப்பில் சுதேசமித்திரன் என்ற வார இதழில் எழுதினார். அந்த புத்தகம் 1967 ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
தி. ஜானகிராமன் நாவல்கள்:
ஜானகிராமன் இயற்றிய நாவல்கள் என்னென்ன என்பதை பற்றி கீழே கொடுக்கபட்டுள்ளன.
- அமிர்தம் (1945),
- மலர்மஞ்சம் (1961)
- அன்பே ஆரமுதே (1963)
- மோகமுள் (1964)
- அம்மா வந்தாள் (1966)
- உயிர்த்தேன் (1967)
- செம்பருத்தி (1968)
- மரப்பசு (1975)
- அடி (1979)
- நளபாகம் (1983)
தி. ஜானகிராமன் குறுநாவல்கள்:
- கமலம் (1963)
- தோடு (1963)
- அவலும் உமியும் (1963)
- சிவஞானம் (1964)
- நாலாவது சார் (1964)
- வீடு
தி.ஜானகிராமன் சிறுகதைகள்:
- கொட்டுமேளம் (1954)
- சிவப்பு ரிக்ஷா (1956)
- அக்பர் சாஸ்திரி (1963)
- யாதும் ஊரே (1967)
- பிடிகருணை (1974)
- சக்தி வைத்தியம் (1978)
- மனிதாபிமானம் (1981)
- எருமைப் பொங்கல் (1990)
- கச்சேரி (2019)
தி.ஜானகிராமன் நாடகம்:
- நாலுவேலி நிலம் (1958)
- வடிவேல் வாத்தியார் (1963)
- டாக்டர் மருந்து
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |