அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 நாவல் புத்தகங்கள்..!

Top 10 Best Novels in Tamil

Top 10 Best Novels in Tamil

அன்பான நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் நாம் அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 சிறந்த தமிழ் நாவல் புத்தகங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். பெரும்பாலும் சிலருக்கு புத்தகம் படிப்பது என்பது பிடிக்கும். கட்டாயம் அனைவரும் சிறந்த புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். புத்தகங்கள் படிப்பது என்பது ஒரு நல்ல பழக்கம் ஆகும். புத்தகங்கள் படிப்பதால் நாம் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். புத்தகங்கள் உலகில் அழியா பொருட்களாக இருக்கின்றன. அதுபோல இன்று நாம் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகங்கள் என்ன என்பதை பற்றி தான் சொல்ல போகிறோம். அந்த புத்தகங்களை படித்து அதில் இருக்கும் சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

நாம் படிக்கவேண்டிய சிறந்த 10 தமிழ் நாவல் புத்தகங்கள் என்னென்ன தெரியுமா.?

1. கற்றதும் பெற்றதும்:

கற்றதும் பெற்றதும்

இந்த கற்றதும் பெற்றதும்” என்னும் புத்தகத்தை எழுதியவர் சுஜாதா என்பவர் ஆவார். இந்த கற்றதும் பெற்றதும் என்னும் புத்தகத்தில் உரித்தான‌ குறும்புக‌ள், அறிவிய‌ல் தேட‌ல்க‌ள், சாம‌ர்த்திய‌மான‌ ச‌மூக‌ச் சாட‌ல்க‌ள், எதிர்கால‌க் க‌ன‌வுக‌ள், க‌வ‌லைக‌ள், அனுப‌வ‌ப் பாட‌ங்க‌ள் எல்லாமே இடம் பெற்றுள்ளன.

2. தோட்டியின் மகன்:

தோட்டியின் மகன்

“தோட்டியின் மகன்” என்னும் நூலை தகழி சிவசங்கரப் பிள்ளை என்பவர் 1947- ல் எழுதியுள்ளார். இந்த நாவல் இலக்கியத்தில் மட்டுமில்லாமல் சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தோட்டிப் பிழைப்பு என்று பின் தள்ளப்பட்ட உலகை மக்கள் கவனத்துக்கு கொண்டு வந்த நாவல் தான் தோட்டியின் மகன். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் இந்த நாவல் வெற்றி பெற்று வந்தது.

3. கொலையுதிர் காலம்: 

கொலையுதிர் காலம்

எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகளில் இந்த “கொலையுதிர் காலம்” படைப்பும் ஓன்று. இந்த நாவல் சுஜாதா அவர்கள் எழுதிய நாவல்களில் மிகவும் புகழ்பெற்ற நாவலாக இது உள்ளது. இதில் மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்க முடியாத புதிர்களும் நிறைந்த நாவலாக கொலையுதிர் காலம் உள்ளது.

4. தனிமையின் நூறு ஆண்டுகள்: 

தனிமையின் நூறு ஆண்டுகள்

“தனிமையின் நூறு ஆண்டுகள்” என்னும் இந்தப் புத்தகம் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் என்ற எழுத்தாளரால் ஸ்பானிஷ் மொழியில் 1967 ல் எழுதப்பட்ட நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு தான் இந்த நூல். இந்நூல் அதிகாரப்பூர்வமாக 37 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

5. உறுபசி: 

உறுபசி

இந்த “உறுபசி” என்ற நூலை எஸ்.ராமகிருஷ்ணன் என்பவர் எழுதியுள்ளார். கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்த இளைஞன் தன் வாழ்நாளில் சந்திக்கும் போராட்டங்கள், அவலங்கள் மற்றும் புறக்கணிப்புகளும் சமூகம் அவனைத் துரத்தி வேட்டையாடுவதையும் பற்றி உறுபசி நூலில் கூறப்பட்டுள்ளது.

6. யாமம்: 

யாமம்

இந்த “யாமம்” என்ற நூல் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நாவல்களில் 4 ஆவது நாவல் ஆகும். அத்தர் என்ற அற்புதப் பொருளைப் பற்றிய ஒரு புனைகதை தான் இந்த யாமம் என்ற நூல்.

7. கோபல்லபுரத்து மக்கள்:

கோபல்லபுரத்து மக்கள்

இந்த “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவல் கி.ராஜநாராயணன் என்பவர் எழுதிய நூல் ஆகும். விகடனில் தொடராக வெளிவந்து இந்த கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவல் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அகாதெமியின் பரிசையும் பெற்றுள்ளது.

8. வெக்கை:

வெக்கை

“வெக்கை” என்ற இந்த நாவல் எழுத்தாளர் பூமணி அவர்களால் எழுதப்பட்ட தமிழ்ப் புதினம் ஆகும். இந்த வெக்கை என்னும் நாவல் 1982 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூல் ஆகும். இந்த வெக்கை என்னும் நாவல் சாதிய ஆதிக்கத்தின் தாக்கத்தைப் பற்றிய ஒரு அனுபவமாக திகழ்கிறது.

9. சோளகர் தொட்டி:

சோளகர் தொட்டி

இந்த “சோளகர் தொட்டி” என்னும் நாவலை ச.பாலமுருகன் என்பவர் எழுதியுள்ளார். பழங்குடி மக்களின் பண்பாடு, வாழ்க்கை, தொன்மங்கள் மற்றும் வனம் போன்றவற்றுடன் தனக்குள் இருந்த பிணைப்பை இந்த சோளகர் தொட்டி என்ற நாவலில் வெளிப்படுத்தி கூறியுள்ளார்.

10. புத்தனாவது சுலபம்:

புத்தனாவது சுலபம்

“புத்தனாவது சுலபம்” என்னும் இந்த நாவல் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதைகளில் ஒன்றாகும். இந்த புத்தனாவது சுலபம் என்னும் புத்தகம் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. மனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையுமே வாழ்நிலையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாவல் தான் இந்த புத்தனாவது சுலபம் என்னும் நாவல்.

இறப்பதற்கு முன் படிக்க வேண்டிய 8 தமிழ் புத்தகங்கள்..!

 

இதுபோன்று புத்தகங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 Novel Writers