நாம் படிக்கவேண்டிய சிறந்த 10 தமிழ் நாவல் புத்தகங்கள் என்னென்ன தெரியுமா.?

சிறந்த பத்து தமிழ் நாவல்கள்

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் சிறந்த பத்து நாவல் புத்தகங்கள் என்னவென்றும் அதை எழுதியவர்கள்  யார் என்றுதான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். பொதுவாக புத்தக பிரியர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலும் புத்தக  பிரியர்கள் எந்த ஒரு புத்தங்கங்களை படிக்கும் பொழுதும் அதில் ஆழ்ந்து விடுவார்கள். ஆனால் நாம் இன்று தெரிந்துகொள்ள போகின்ற நாவலை பார்த்தால் அதிலிருந்து  வெளிவருவதற்கு மனமே இருக்காது. அப்படி என்ன நாவலாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசையா? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

தி. ஜானகிராமன் பற்றிய தகவல்கள்

1. புயலிலே ஒரு தோணி நாவல்:

புயலிலே ஒரு தோணி நாவல்

இந்த புயலிலே தேனீ என்ற நாவலை எழுதியவர் ப. சிங்காரம் ஆவர். இந்த தலைப்பிற்கு ஏற்ப இந்த நாவலை அருமையாக படைத்துள்ளார். அதாவது இந்த நாவலானது கதைக்கரு தோன்றி மறைந்து மீண்டும் வளர்ந்து தோன்றுவது போல அமைந்துள்ளது. இந்த கதையில்  இருக்கும் வாசகங்கள் வெவ்வேறு தளங்களுக்கும் முடிவற்று இழுத்து செல்வது போல இந்த நாவல் அமைந்துள்ளது.

2. பொன்னியின் செல்வன் நாவல்:

பொன்னியின் செல்வன் நாவல்

பொன்னியின் செல்வன் நாவலை எழுதியவர் அமரர் கல்கி ஆவர். இந்த பொன்னின் செல்வன் நாவல் ஆனது மிகவும் புகழ் பெற்ற தமிழ் வரலாற்று புதினமாகும்.  மேலும் இந்த நாவலனது  1950- 1955 ஆண்டு வரை கல்கி வார இதழ்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நூல் ஆனது பல பதிகங்களையும், ஐந்து பாகங்களையும் கொண்டுள்ளது.  மேலும் இதில் இருக்கும் கதைகள் கி. பி 1000 ஆம் ஆண்டு பிறந்த சோழப் பேரரசைக் கொண்டு எழுதப்பட்டவையாகும்.

3. கோபல்ல கிராமம் நாவல்:

கோபல்ல கிராமம் நாவல்

கோபல்ல கிராமம் நாவலை எழுதியவர் ராஜநாராயணன் அவர்கள் ஆவார். இவர் படைத்த படைப்புகளில் இந்த நூல் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த நூலின் ஐந்தாவது அத்தியாயத்தில் மங்கைத் தாயார் அம்மாள் என்பவரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த கதையில் கிராமிய மொழி நடையும் இடையில் புரியாத கிராமிய சொற்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.  மேலும் இந்த கதை மிகவும் சுவாரசியமான  கதையாக இருப்பதால் சலிப்புத்தன்மை இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

4. ஒரு புளிய மரத்தின் கதை நாவல்:

ஒரு புளிய மரத்தின் கதை நாவல்

இந்த ஒரு புளிய மரத்தின் கதை நாவலை  எழுதியவர் சுந்தர் ராமசாமி அவர்கள் ஆவர். இந்த நாவலனது 1966 ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த கதை தமிழ் மொழியில் மட்டுமின்றி, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம்  போன்ற மொழிகளிலும் பெயரிடப்பட்டுள்ளது.  இவை ஆங்கிலத்தில் பெங்குவின் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவை ஜெர்மனி மொழியிலும் பெயரிடப்பட்டு வருகின்றது.

5. மோகமுள் நாவல்:

மோகமுள் நாவல்

மோகமுள் என்னும் நாவலை எழுதியவர் தி. ஜானகிராமன் அவர்கள் ஆவர். இந்த நூலானது மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு அற்புதமான நூலாகும். இந்த நாவலை கொண்டு திரைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

6. கடல் புறா நாவல்:

கடல் புறா நாவல்

கடல் புறா நாவலை எழுதியவர் சாண்டில்யன் அவர்கள் இந்த கதையானது சோழனின் படைத்தளபதியாக  கருணாகரத் தொண்டைமானை கொண்டு எழுதப்பட்டவையாகும். அதாவது சிறீ விஜய நாட்டில் இருக்கும் சோழர் என்பவர் இளவரசனின் உதவியை தேடி வருகிறார், அவர்களுக்கு உதவி புரிவதற்காக இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் உதவுவதே இந்த கதையாகும்.  இது ஒரு வரலாற்று புதினமாகும்.

7. சிவகாமியின் சபதம் நாவல்:

சிவகாமியின் சபதம் நாவல்

சிவகாமியின் சபதம் என்னும் நாவலை எழுதியவர் அமரர் கல்கி ஆவர். இந்த நாவலனது அற்புதமான புதினமாகும். இந்த நாவலின் கதையானது முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற போரையும் , சம்பவங்களை பற்றியும் எழுதப்பட்டவையாகும். மேலும் இந்த புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடத்திலும் இடம்பெற்றுள்ளார்.

8. ஜே ஜே சில குறிப்புகள்:

ஜே ஜே சில குறிப்புகள்

ஜே ஜே சில குறிப்புகள் என்ற நாவலை எழுதியவர் சுந்தர ராமசாமி அவர்கள் ஆவார். இந்த கதையில் எழுத்தாளரின் வறுமை, சுயமரியாதை போன்ற அவருடைய நிலைமையை பற்றியும் இதில் கதையாக உருவாக்கியுள்ளார். அதாவது கேரளாவில் இருந்த ஒரு எழுத்தாளரை பற்றி வர்ணிக்கப்பட்டு  எழுதப்பட்டுள்ளது.  மேலும் அதில் ஓவியர் பாஸ்கர் அவர்களின் ஓவியங்களும் அதில் பதிக்கப்பட்டுள்ளன.

9. உடையார் நாவல்:

உடையார் நாவல்

உடையார் என்னும் நாவலை எழுதியவர் பாலகுமாரன் என்பவர் ஆவார். இந்த உடையார் நாவல் ஆனது ஆறு பாகங்களையும் கொண்டுள்ளது.  உடையார் நாவலில் எழுதப்பட்ட கதையானது  தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் ஆட்சியை பற்றியும், அவரால் தஞ்சையில் எழுப்பப்பட்ட கோவிலை பற்றியும் எழுதப்பட்டவையாகும்.

10. அலை ஓசை நாவல்:

அலை ஓசை நாவல்

இந்த அலை ஓசை என்னும் நாவலை எழுதியவர் அமரர் கல்கி ஆவார். இந்த நாவலானது சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் நாவல் இதுவே ஆகும். இந்த நூலில் எழுதப்பட்ட கதையானது சுதந்திர போராட்ட காலத்தின் பொழுது மக்களின் மனநிலைகள் எப்படி இருந்திருக்கும் என்பதை பற்றி வர்ணித்து எழுதப்பட்டவையாகும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil