சிறந்த 10 நாவல் எழுத்தாளர்கள்| Top 10 Tamil Novel Writers in Tamil

Advertisement

Top 10 Tamil Novel Writers in Tamil

அனைவருக்கும் புத்தகம் என்றால் படிக்கும். சிலருக்கு புத்தகம் எடுத்தால் மட்டுமே தூக்கம் எங்கிருந்து வருகிறது என்று தெரியாது. அந்த அளவிற்கு தூக்கம் வரும். கேட்டால் அது நல்ல கதை இல்லை. அதனால் தான் படிக்க படிக்க தூக்கம் தான் வருகிறதுஎன்று சொல்வார்கள். ஆனால் ஒரு சில எழுத்தாளர்களுடைய புத்தகம் மட்டும் படிப்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த வரிசையில் இன்று 10 சிறந்த நாவல் எழுத்தாளர்களை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

Top 10 Tamil Novel Writers in Tamil:

01 கண்ணதாசன்
02 சசி முரளி
03 லட்சுமி
04 அனுராதா ரமணன்
05 ஸ்ரீகலா
06 யத்தனபூடி சுலோசனா ராணி
07 ரமணிச்சந்திரன்
08 மல்லிகா மணிவண்ணன்
09 சுஜாதா
10 கல்கி கிருஷ்ணமூர்த்தி 

 

கண்ணதாசன்:

கண்ணதாசன்

கண்ணதாசன் பற்றி உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. அந்த அளவிற்கு அவருடைய எழுத்துக்களும் வாழ்க்கையை நினைவுப்படுத்தும். கவிஞர், நடிகர், திரைப்படப் பாடலாசிரியர், தத்துவவாதி, பரோபகாரர், ஆசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் புகழ்பெற்ற பாடலாசிரியர்களில் ஒருவர்.

இவர்களின் படைப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். 6 ஆயிரம் கவிதைகள் மற்றும் 232 புத்தகங்கள் தவிர 5000 -க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை வழங்கியுள்ளார். இவருடைய சேரமான் காதலி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

சசி முரளி:

சசி முரளி அவர்கள் 12 நாவல் எழுதியுள்ளார். ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் மட்டும் அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு இவருடைய 12 நாவல்களுமே பெருமைக்குரியது. இவர் சமீப காலமாக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக உள்ளார்.

லட்சுமி:

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்ற இவர், கல்லூரியில் படிக்கும்போதே ஆனந்த விகடனின் பிரபல இதழ்களில் தனது சிறுகதைகளை வெளியிடத் தொடங்கினார். திருபுரசுந்தரி 1921 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தொட்டியம் என்னும் ஊரில் பிறந்தார். இவர் 100 –க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

அனுராதா ரமணன்:

சமூக ஆர்வலர் மற்றும் கலைஞர் ஆவார். 29 ஜூன் 1947 அன்று தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்தார். இவர் 16 மே 2010 இல் இறந்தார். இவர் 1230 –க்கும் மேற்பட்ட சிறு கதைகளையும், 800 நாவல்களை எழுதியுள்ளார். இவருடைய கதைகள் மட்டும் நாவல்கள் குடும்பத்தையும் அன்றாட நிகழ்வுகளையும் நினைவுபடுத்தும் வகையில் தான் இருக்கும். ஆனந்த விகடன் இவருடைய சிறுகதைக்கு தங்கப்பதக்கம் வழங்கியுள்ளது.

ஸ்ரீகலா:

இவர் பல காதல் நாவல்களை எழுதியுள்ளார். இவர்களுக்கு என்று தனி பெரும் ரசிகர்கள் உள்ளனர். மேலும் காதல் நாவல்களை படிக்க விரும்புவர்களுக்கு இவரின் புத்தகங்கள் சிறந்தது.

யத்தனபூடி சுலோசனா ராணி:

இவர் ஒரு பிரபலமான நாவல் எழுத்தாளர் மற்றும் அவர் 1970 -கள் மற்றும் 1980 -களின் முற்பகுதியில் அதிகளவு ரசிகர்களை கவர்ந்தது இவருடைய புத்தகத்திற்கு தான். இந்திய தெலுங்கு மொழி நாவலாசிரியரும் ஆவார். இவருக்கு இரண்டு நந்தி விருதுகள் கிடைத்துள்ளது. அவர் 2 ஏப்ரல் 1940 இல் பிறந்தார் மற்றும் 2018 மே 18-ல் இறந்தார்.

ரமணிச்சந்திரன்:

Ramani-Chandran-Biography-in-Tamil

ரமணிசந்திரன் இலக்கிய பெண்ண நாவல் எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். இவருடைய புத்தகங்கள் அனைத்துமே சந்தையில் வேகமாக விற்கும். இவர் காதல் நாவல்களை எழுதுவதில் கை தேர்ந்தவர். இவருடைய பெரும்பாலான நாவல்கள் அவள் விகடன் மற்றும் குமுதம் போன்ற பிரபலமான பத்திரிகைகளில் வரும். 1938 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி பிறந்தார். இவர் 178 நாவல்களை எழுதியுள்ளார்.

மல்லிகா மணிவண்ணன்:

இவருடைய நாவல்கள் அனைத்தும் குடும்பம், காதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தான் இருக்கும். அதேபோல் நிறைய குறும்படங்களும் வெளியிட்டுள்ளார். இவருக்கு என்று தனி ரசிக பெருமக்கள் உள்ளார்கள்.

சுஜாதா:

சுஜாதா

 

புகழ்பெற்ற நாவல் ஆசிரியர்களின் பட்டியலில் இவரும் ஒருவர். இவர் 200 -க்கும் மேற்பட்ட சிறு கதைகள் மற்றும், 100 -க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். கல்கி, ஆனந்த விகடன், போன்ற தமிழ் இதழ்களில் சுவாரசியமான பத்திகளில் தொடர்ந்து இவருடைய சிறுகதைகளை எழுதியுள்ளார். 3 மே 1935 இல் பிறந்தார் மற்றும் அவர் பிப்ரவரி 27, 2008 -இல் இறந்தார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி:

கல்கி கிருஷ்ணமூர்த்தி

கிருஷ்ணமூர்த்தி தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற நாவல் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் பெரிய சிறுகதைகள், நாவல்கள், சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள்எழுதி  இருகிறார்கள். இவரை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.

இவர் சிறந்த எழுத்தாளர், விமர்சகர் மற்றும் பத்திரிகையாளர். 1999 ஆம் ஆண்டில், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ஓவியம் இந்தியாவின் முத்திரையில் இருந்தது. இவருக்கு சாகித்ய அகாடமி வழங்கப்பட்டது. 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி இந்தியாவின் மணல்மேடு அருகே கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்தார்.

அவர் 55 வயதில் காலமானார். இவருடைய வரலாற்று கதைகளில் பொன்னியின் செல்வன் கதை இன்று வரை ஆர்வமாக படித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இவருடைய கதைகள் பெருமைபடுத்தும் விதமாக உள்ளது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement