Original Indian Valampuri Sangu Price
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் அனைவருமே வலம்புரி சங்கு பற்றி கேள்வி பட்டிருப்போம். வலம்புரி சங்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் கூற கேட்டு இருப்போம். மேலும், இதன் விலை சற்று அதிகம் என்று கூறியிருப்பார்கள். ஆனால், அவற்றின் ஒரிஜினல் விலை என்ன என்பது நமக்கு தெரியாது. எனவே, இப்பதிவில் ஒரிஜினல் வலம்புரி சங்கின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஒரிஜினல் வலம்புரி சங்கின் விலை என்பது, சங்கின் வடிவம், அளவு ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். அதாவது, வலம்புரி சங்கில் சிறியது முதல் பெரியது என பல்வேறு அளவுகளில் இருக்கும். எனவே, அதன் அளவுகளை பொருத்தும் மாறுபடும் என்று கூறப்படுகிறது. ஓகே வாருங்கள், பொதுவாக ஒரு வலம்புரி சங்கின் ஒரிஜினல் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒரிஜினல் வலம்புரி சங்கு விலை | Valampuri Sangu Price:
வலம்புரி சங்கு என்பது சங்குகளில் ஒருவகை சங்கு ஆகும். இது இந்து மதத்தில் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. வலம்புரி சங்கின் விலை அதிகமாக இருந்தாலும் அதனின் பயன் அறிந்து அதனை அதிக விலை கொடுத்து வாங்கி வீட்டில் வைத்து வழிபடுவார்கள்.
வலம்புரி சங்குகள் கருமுட்டையாக வளரத் தொடங்கி பிளவுற்று வளர தொடங்குகிறது. இடம்புரி சங்கிற்கு மேலானது வலம்புரி சங்கிற்கு மேலானது சலஞ்சலம் என்று கூறுவார்கள். அதாவது, ஆயிரம் இடம்புரி சங்கிற்கு சமமானது ஒரு வலம்புரி சங்கு. அதேபோல், ஆயிரம் சங்கிற்கு சமமானது ஒரு சலஞ்சலம் என்று கூறுவார்கள்.
வலம்புரி சங்கில் மூன்று வகைகள் உண்டு. அதாவது, ஆண், பெண் மற்றும் மந்திரி சங்குகள் என மூன்று வகைகள் உள்ளது. மேலும், ஆப்பிரிக்க வலம்புரி சங்கு மற்றும் இந்திய வலம்புரி சங்கு என்று இரண்டு வகையான சங்குகள் உள்ளது. இதில் வலம்புரி சங்கு தெற்கு கேரளாவில் இருந்து கொச்சின் வரை உற்பத்தி ஆகிறது. இந்த இடங்களில் தான் இந்தியன் வலம்புரி சங்கு உற்பத்தி ஆகிறது.
உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கிறதா.! அப்போது இதை செய்யாதீர்கள்..
வலம்புரி சங்கு விலை என்ன.?
இந்தியன் வலம்புரி சங்கு கிராம் கணக்கில் விலை கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒரு கிராம் ஒரிஜினல் வலம்புரி சங்கு ரூ.35,000 முதல் ரூ.70,000 வரை விற்கப்படுகிறது. இதுதான் உண்மையான வலம்புரி சங்கு.
ஆப்பிரிக்க வலம்புரி சங்கின் விலை தோராயமாக 300 ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வலம்புரி சங்கின் அளவுகளை பொறுத்து விலை மாறுபாடும் என்றும் கூறபடுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |