இனி தோசை ஊற்ற கஷ்டப்பட வேண்டாம் பட்டனை தட்டினால் போதும் தோசை ரெடி..
தற்போதைய கால கட்டத்தில் தொழில்நுட்பமானது நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இத்தகைய தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு மனிதனுக்கு மிகவும் பயனுள்ள வகையில் தான் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சமையலறையில் வேலையை எளிதாக்கும் வகையில் தோசை சுடும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தோசை சுடும் இயந்திரம் EVOCHEF LLP என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சரி இந்த பதவியால் இந்த தோசை சுடும் இயந்திரத்தின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி படித்தறியலாம் வாங்க.
தோசை சுடும் இயந்திரம் சிறப்பு அம்சம் – Evochef Dosa Printer Review in Tamil:
பிரிண்டர் போல் இருக்கும் இந்த இயந்திரத்தில் ஒரு பக்கத்தில் தோசை மாவு ஊற்றினால், மறுபக்கம் சுடச்சுட முறுகலான தோசை வெளியே வருகிறது.
எவ்வளவு நேரத்தில் தோசை வேண்டும் என்பதையும் இந்த இயந்திரத்தில் செட் செய்துகொள்ளலாம்.
அதே போல் இந்த தோசை சுடும் இயந்திரத்தில் தோசையின் தடிமன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதாவது உங்களுக்கு மெல்லிசாக தோசை வேண்டும் என்றாலும் செட் செய்துகொள்ளலாம், அதேபோல் மொத்தமாக தோசை வேண்டும் என்றால் அத்தனையும் செட் செய்துகொள்ளலாம்.
பிறகு உங்களுக்கு எத்தனை தோசை வேண்டும் அத்தனையும் செட் செய்து இத்தந்திரத்தின் நடுவில் உள்ள பட்டனை தட்டினால் போதும் தானாகவே தோசையை சுட்டு தந்துவிடும். இதன் சிறப்பு அம்சத்தை தெரிந்து கொண்டோம் இறுதியாக இதன் விலை என்ன என்பதையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
தோசை சுடும் இயந்திரத்தின் விலை Evochef Dosa Printer Price:
இந்த Evochef EC Flip இயந்திரத்தின் விலை 15,999/- ரூபாய் மட்டுமே. EVOCHEF LLP என்கின்ற நிறுவனம் தான் இதனை அறிமுகம் செய்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் https://evochef.in/
இதுபோன்று விலை நிலவரங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Pricelist in Tamil |