மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள் | Manathai Thodum Amma Kavithai in Tamil

Advertisement

Manathai Thodum Amma Kavithai in Tamil | அம்மா கவிதை வரிகள் 

அம்மா என்ற வார்த்தைக்கு ஈடு இணையே கிடையாது. அம்மா என்ற ஒரு வார்த்தையில் தான் இவ்வுலகில் சந்தோசம் என்பதே நிலைத்திருக்கிறது. அம்மா இல்லையென்றால், இவ்வுலகமே இயங்காது. அம்மா என்ற வார்த்தை எவ்வளவு புனிதமானது என்று நம் அனைவருக்குமே தெரியும். இவ்வுலகில் அனைவருக்கும் இருக்கும் ஆறுதலான வார்த்தை என்றால் அது அம்மா தான். அம்மா என்ற வார்த்தைக்கு ஈடாக எதுவுமே இருக்க முடியாது.

நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் உண்மையான அன்பை காணவேண்டும் என்றால், அது தாயின் கண்களில் மட்டுமே காண முடியும். இப்படி அம்மாவை போற்றும் விதமாக தான் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே இந்த பதிவின் வாயிலாக நாம் மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள் பற்றி பார்க்கலாம் வாங்க..!

தாய் பற்றிய திருக்குறள்

மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள்: 

தாயின் கருவறையில் இருந்து
பிறக்கும் போதே
கற்பிக்கப்பட்டு விடுகிறது
“அம்மா” என்னும் மூன்று எழுத்து..!


ஆயிரம் பேர் உன்னை குறை கூறினாலும்,
“உனக்கு என்னடா குறை”
என சொல்லும் அன்னையின் அன்பிற்கு
நிகரான சக்தி ஏதுமில்லை..!


காலம் முழுவதும் உன்னை
வயிற்றிலும் மடியிலும் தோளிலும் மார்பிலும்
சுமப்பவள் “தாய்” மட்டுமே
அவளை என்றும் மனதில் சுமப்போம்..!


நான் முதல் முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
“அம்மா”..!


இன்று என்னை
இவ்வுலகுக்கு அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்..!


எதுவும் அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும் கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே..!


அன்னையர் தின வாழ்த்துக்கள்

உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து கூறும் முதல்
குருவாக இருப்பவர்
“அம்மா” மட்டுமே..! 


ஆயிரம் உறவுகள்
உன் மீது அன்பாக இருந்தாலும், 
அன்னையின் அன்புக்கும்
அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது..!


தாய் மடியைக் காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில்
வேறெதுவும் இல்லை..! 


அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது..! 


ஊர் முழுவதும் பல
நூறு கோயில்கள் இருந்தாலும்,
அம்மாவைப் போல்
ஒரு சாமி இல்லை..!


அம்மா பற்றிய கவிதை 4 வரிகளில்

ஆறாத காயங்களுக்கு
ஆறுதல் தேடி அழைந்தாலும்,
இறுதியில் அடைக்கலம் கிடைப்பதென்னவோ,
அன்னையின் மடியில் தான்..!


அன்பின் மழைச் சாரல்
அவளது உழைப்பின் வியர்வை,
புன்னகை பொழியும் அவள் முகம்
காதலின் மர்மம், அம்மா..!


ஆரம்பம் முதல் கடைசி வரை
மாறாமல் கிடைக்கும்
ஒரே அன்பு, அது
அம்மாவின் அன்பு மட்டுமே..!

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement