உழைப்பு பொன்மொழிகள் 2024

Advertisement

Ulaippu Ponmoligal in Tamil

இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவருமே உழைத்து தான் வாழவேண்டும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், உழைத்தால் தான் வாழவே முடியும். இதனை மனதில் வைத்து தான் ஒவ்வொரு மனிதனும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே உழைக்கும் மனிதர்களை போற்றும் விதமாக தான் ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் தேதியை அழைப்பாளர்கள் தினமாக கொண்டாடி வருகின்றோம். ஆகவே இந்த பதிவின் வாயிலாக இன்று உழைப்பு பற்றிய பொன்மொழிகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

மே 1 உழைப்பே உயர்வு கவிதை

உழைப்பு பற்றிய பொன்மொழிகள்: 

உங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் கடின உழைப்பு ஓன்று மட்டுமே தீர்வாக அமையும் – அப்துல்கலாம்.

 

உயிர் உள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க தான் எனக்கு உயிர்வாழ விருப்பம் அதிகரிக்கிறது – பெர்னார்ட் ஷா.

அறிவு கொஞ்சமாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் – எடிசன்.

நமக்கு இன்னலும் இடையூறும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நமது உழைப்பு ஒருநாளும் வீண்போகாது.

உழைக்கிறவன் கையில் இருக்கும் அழுக்கு தங்கமாகும். உழைக்காதவன் கையில் இருக்கும் தன்மை அழகாகும் – வைரமுத்து.

உழைப்பதற்கு தயங்காத வரையிலும், பிழைப்பதற்கு தடங்கல் இருக்காது – இரா. பெரியசாமி.

மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல், தாமாக ஒரு போதும் நடப்பதில்லை – சுவாமி விவேகானந்தர்.

உழைப்பு, உடலைப் பலப்படுத்தும்; கஷ்டங்கள் மனதைப் பலப்படுத்தும் – பிளமிங்.

பத்து விரல்களும் பதறாது உழைத்தால், அஞ்சு விரலால் அஞ்சாது தின்னலாம் – டாலிராண்ட்.

உழைப்பாளர் தின வரலாறு

அளவற்ற உழைப்பைத்தான் மேன்மை என்கிறோம் – லாங்பெல்லோ.

கடுமையான உழைப்பைத் தவிர, வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை – டர்னர்.

ஏழ்மை என்ற நோய் அகல வேண்டுமானால், உழைப்பு என்ற மருந்தைக் கொடு – எமர்சன்.

உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமையானது – ராபர்ட் சப்ரிசா.

உழைப்பு இல்லாமல் வெற்றி கிடைக்காது – ஜேம்ஸ் ஆலன்.

கடினமான உழைப்பு, தெய்வ வழிபாட்டுக்குச் சமம் – லால் பகதூர் சாஸ்திரி.

சோம்பல், தீய பழக்கம், வறுமை ஆகிய மூன்று தீமைகளை உழைப்பு களைகிறது – வால்டேர்.

அடிமையைப்போல உழைப்பவன், அரசனைப்போல உண்பான் – கதே.

உழைப்பு வறுமையை மட்டுமல்லாமல், தீமையையும் விரட்டுகிறது – வால்டேர்.

செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு; உலகத்தை இயக்குவதும் அதுவே – வெப்ஸ்டர்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement