ஊட்டச்சத்து பற்றிய கவிதை
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஊட்டச்சத்து பற்றிய கவிதை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு ஊட்டசத்து மிகவும் முக்கியமான ஒன்று. வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் (CHO), புரதங்கள், நீர் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை முக்கியமான் ஊட்டசத்துக்கள் ஆகும்.
இவற்றினை நாம் சரியான அளவில் எடுத்துக்கொள்ளும்போது, உடல் எந்தவித ஆரோக்கிய குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இக்காலத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம், தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களையே அதிகமாக உட்கொள்கிறார்கள். ஊட்டச்சத்தின் அவசியம் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. எனவே, ஊட்டச்சத்தின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில், ஊட்டச்சத்து அவசியத்தை கவிதை வடிவில் கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
Ootachathu Patriya Kavithai in Tamil:
உணவே மருந்து என்று சொன்னார்கள்,
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தான் வழி.
காபோஹைட்ரேட்டு, புரதம், கொழுப்பு,
விட்டமின்கள், தாதுப்பொருட்கள் அனைத்தும் தேவை.
கிழங்குகள், தானியங்கள் காபோஹைட்ரேட்டின் வீரர்,
இறைச்சி, மீன், முட்டை, பால் புரதத்தின் வீரர்.
கொழுப்பு தோல், தலைமுடி ஆரோக்கியத்துக்கு அவசியம்,
பழங்கள், காய்கறிகள் விட்டமின்களின் வீடு.
ஊட்டச்சத்து குறைபாடு நோய்களுக்கு வித்திடும்,
ஆரோக்கியமான உணவுகள் உடலுக்கு பலம் தரும்.
உணவில் ஊட்டச்சத்து நிறைந்திருக்க,
உடல் ஆரோக்கியம் எப்போதும் மலர வேண்டும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் உண்ணுவோம்,
நோய்களை விரட்டி ஆரோக்கியத்தை பெருக்குவோம்
ஊட்டச்சத்து பற்றிய கவிதை:
- பயிர் வளர உயிர்ச்சத்து.! குழந்தைகள் வளர ஊட்டச்சத்து.!
- ஊட்டச்சத்தை சேர்த்திடு! உடல் வலிமையை பெற்றிடு.!
- வாட்டமில்லா வாழ்விற்கு ஊட்டமுள்ள உணவே சிறந்தது.!
- உன் எதிர்காலம் நீ உண்ணும் உணவிலேயே அடங்கியுள்ளது.. சிறந்த உணவே சிறந்த வாழ்க்கையின் அடித்தளம்.!
- உங்கள் நலனே உங்கள் செல்வம்.!
- ஆரோக்கியமான உணவே மகிழ்ச்சியான வாழ்க்கை.!
- ஊட்டச்சத்தே எமது வாழ்வின் ஆதாரம்.!
- நன்றாக வாழ ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுங்கள்.!
- சத்தான உணவே! நோய் தீர்க்கும் மருந்து.!
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |