எங்கே சுதந்திரம் கவிதை
இந்தியா பிரிட்டிஸ் ஆட்சிகளிடமிருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 நாள் விடுதலை அடைந்து. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 நாள் அன்று சுதந்திர தினமாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டு இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளன்று இந்தியா முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திரம் பெற போராடியவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இத்தகைய சுதந்திர தினத்தை பற்றிய வரிகளை கவிதைகளாக தொகுத்துள்ளோம். அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
Enge Suthanthiram Kavithai:
கொடியேற்றிக் கொண்டாட
விடுமுறையென அறிவித்து
இல்லங்களில் ஓய்வெடுத்து
இன்றைய நிகழ்ச்சிகளென
தொலைகாட்சியை பார்த்து
விடுதலைக்காக போராடிய
வீரர்களை தியாகிகளை
மறந்து மகிழ்ந்திருப்பதா
சாதிக்கொரு சங்கமொன்று
வீதிக்கொரு கட்சியொன்று
அமைப்பதும் ஆர்ப்பரிப்பதும்
மதவெறியை தலைக்கேற்றி
வாய்ச்சவடால் வாளேந்தி
வன்முறையை கட்டவிழ்த்து
நாளுக்கொன்று அரங்கேற்றி
அவலநிலை உருவாக்குவதா
சீர்கெட்ட அரசியலால்
சீரழிந்த சமுதாயத்தை
சீராக்கும் எண்ணமின்றி
சுயநல நோக்கமுடன்
சுத்தமிலா நெஞ்சங்கள்
சுற்றிச்சுற்றி உலாவரும்
செயல்படா செயலிகளாய்
செல்லரித்த தேசமானதே
அழிக்கப்படா வறுமைக்கோடு
ஒழிக்கப்படா லஞ்சலாவண்யம்
தீர்க்கப்படா ஏற்றத்தாழ்வுநிலை
திருத்தப்படா சட்டதிட்டங்கள்
வாழவியலா வாழ்வாதாரம்
பாதுகாப்பிலா சமுதாயம்
சுதந்திரமிழந்த கருத்துரிமை
இதுவன்றோ இன்றையநிலை !
எங்கே சுதந்திரம் ?
என்று காண்போம் ?
சுதந்திர தின பாடல் வரிகள் தமிழ்
சுதந்திர தேசத்தில் சுதந்திரம் எங்கே:
அன்று………
அன்னியவன் கையில் பாரத தேசம்
இருந்த போது, நம்மக்கள்
அவலவாழ்க்கை வாழ்ந்தார்கள்.
விலை மாடுகள் போல நாடுகடத்தப்பட்டார்கள்.
எல்லாத்துயரங்களையும் நெஞ்சில் தாங்கியபடி
தினம் தினம் கண்ணீர்வடித்துக்கொண்டே வாழ்ந்தார்கள்.
எங்கே எம் தேசம் விடியாதா? எங்கே எம்தேசம் விடியாதா.?
சுதந்திர தாகம் மலராதா என்ற ஏக்கம்
சுதந்திரவேள்வித்தீயில்,
ஆயிரம் ஆயிரம் வீரர்கள் மார்பில்
குண்டுகள் பட்டு வழிந்த இரத்தத்தில்
பிறந்தது பாரதக் கொடி,
அதுவே எங்கள் தேசத்தின் அசோகக் கொடி..
இன்று……
அரும்பாடுபட்டுப்பெற்றசுதந்திரம்எங்கே?
அன்றாடம் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும்
இளம் பெண்களை பாலியல் வண்கொடுமை
என்ற சொற்றொடர் தாங்கியபடி
தினம் தினம் செய்திகள்..
பெற்ற சுதந்திரம் எங்கே பெற்றசுதந்திரம்எங்கே?
மீன் பிடிக்க கடலுக்கு போன மீனவன் வரும்வரை,
மனைவி கரையில் கண்ணீர் சிந்துகிறாள்
சுதந்திர நாளில் செங்கோட்டையில்
சிகப்புக் கம்பளம் விரித்து கொடி ஏற்ற,
உப்புக்கடலில் மீனவன் இரத்தம் சிகப்பாகிறது
எங்கே சுதந்திரம் புதைந்தது?
நாளை……
பட்டொளி வீசும் பாரதக்கொடி ஏறட்டும்
பாரத மாந்தர்கள் மகிழட்டும்
நெஞ்சினில் இனிப்பு திகடட்டும்
சத்திய தர்மம் நிலைக்கட்டும்
சமாதானம் நிலவட்டும்!
பாரததேசத்தில் வாழ்வோருக்கும் வாழ்த்துக்கள்..
சுதந்திரதேசத்துக்காய்
இன்னுரை ஈகம் செய்தோர்க்கும்
வீர வணக்கம்!!!
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |