கல்வி பற்றிய கவிதை 10 வரிகள் | Education Quotes 10 Lines in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கல்வி பற்றிய கவிதையை 10 வரிகளில் கொடுத்துளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்று நம் அனைவருக்கும் தெரியும். அறிவை மேலும் மேலும் அதிகப்படுத்திக்கொள்ள கல்வியறிவு அவசியம். இதனால், கல்வியை மிகப்பெரிய செல்வமாக கூறுகிறார்கள். பணம், நகையை விட மிக உயர்ந்த செல்வம் கல்வியறிவு பெற்றிருப்பது தான்.
கல்வி என்பது, ஒருவருடைய அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்தி சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை அளிக்கும் செல்வமாகும். அதுமட்டுமில்லாமல், கல்வி ஆனது, ஒரு மனிதனுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதோடு நேரத்தின் மதிப்பையும் கற்று கொடுக்கிறது. ஆகையால், இதனை அனைவருமே கற்றுக்கொள்ள வேண்டும்.
கல்வி கவிதை 10 வரிகள்:
நம் வாழ்க்கை என்னும் தேரை,
அழகாய் செதுக்கிடுமே கல்வி.!
இருளை அகற்றி
வெளிச்சத்தை தந்திடுமே கல்வி.!
அறியாமையை அகற்றி
அறிவை காட்டும் அற்புத விளக்கு தான் கல்வி.!
நம் வாழ்வை கற்பக விருட்சம் போல்
வளரச் செய்திடுமே கல்வி.!
எண்ணத்தை செம்மைப்படுத்தி
ஏற்றமிகு வாழ்வை தந்திடுமே கல்வி.!
கல்வி பற்றிய பொன்மொழிகள் 10:
- கல்வியின் வேர்கள் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால்,
அது தரும் பழம் இனிப்பு நிறைந்தது. - கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது.
- அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கிக்கொள்ளப்
பயன்படும் கருவி கல்வி. - இளமைக் காலத்தில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால வாழ்விலும் இறந்தவன்.
- ஒரு விதத்தில் – பொது அறிவு இல்லாமல் கல்வி பெறுவதை விட கல்வி இல்லாமல் பொது அறிவு இருப்பது ஆயிரம் மடங்கு சிறந்தது.
- நன்கு கற்றுணர்ந்த மனிதனே தன்னுடைய
அறியாமையைப்பற்றி அறிவான். - கல்வி என்பது வெறுமனே ஒரு வாளியை நிரப்பும் விஷயமல்ல அது நெருப்பை பற்ற வைக்கும் விஷயம் போன்றது.
- கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது.
- கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள்.
- ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்.
- இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.
- கல்வி என்பது ஒரு ஆயுதம், அதன் விளைவு அதைப் பிரயோகிக்கும் கைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
Education Quotes 10 Lines in Tamil:
- கல்விக்கும் தொழிலுக்கும் வந்தனை
செய்வோம்.! - வீணில் உட்கார்ந்து இருப்போரை
கிந்தனை செய்வோம். - கல்வியும் தொழிலும் சேர்ந்து
படிப்போம். - தொழிற்கல்வியில் தேர்ச்சியுற்று
சிறந்து விளங்குவோம். - பாரினில் சிறந்த செல்வம் கல்விச்
செல்வமே. - இன்பத்தேரினில் தொடர்ந்து வரும்
அனைத்து செல்வமுமே.
இது போன்ற பல தத்துவங்கள் சார்ந்த பதிவுகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> | QUOTES IN TAMIL |