தமிழ் மொழி பற்றிய கவிதை

Advertisement

தமிழ் மொழி பற்றிய கவிதைகள் 

தமிழர்களின் தாய் மொழி தமிழ் மொழியாகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். தமிழ் மொழியின் சிறப்பை பற்றிக்கூற வார்த்தைகள் இல்லை. சரி இந்த பதிவில் தமிழ் மொழி பற்றிய கவிதை வரிகளை image மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த தமிழ் மொழி கவிதைகளை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி..!

தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் கவிதைகள்:

எனது இன்பத் தாய்மொழி
மனது நிறையும் இனியமொழி

கன்னல் போல் இனித்திடும்
களிபே ருவகை அளித்திடும்
மூவேந்தர் போற்றி வளர்த்தமொழி
முக்கண்ணன் பெருமை பேசுமொழி

இனிமை கூட்டும் இன்பமொழி
இளமை காக்கும் அருமைமொழி
துன்பம் போக்கும் துடிப்புமொழி
நன்மை விளைக்கும் நற்செம்மொழி

இதயத் தெழுந்த உண்மைமொழி
இனிமைத் தமிழே நீவாழி

Tamil Patriya Kavithaigal:

என்னைத் தாலாட்டிய மொழி
எனதருமைத் தாய் மொழி
என் இனிய தமிழ் மொழி
எண்ணமெல்லாம் நிறைந்த மொழி

என்னை நான் தொலைத்த போது
என்னுள்ளே புதைந்த போது
எண்ணெய் ஆக மிதந்து என்
எண்ணங்களை ஒளிரச் செய்த மொழி

இதயத்தின் நாளங்கள் முஹாரி மீட்டினாலும்
இனிமையான கல்யாண ராகம் பாடினாலும்
இதயத்தின் வலி மறக்க உதவும் மருந்தாய்
இனிய என் தாய் மொழி என்றும் என்னுடனே

முகமிழந்து போனாலும் இக்கொடிய உலகில்
முதுமையில் வீழ்ந்து அமிழ்ந்து போனாலும்
முகவரி இழக்காது இலக்கிய உலகில்
முத்தாக மிளிரச் செய்யும் இனிய மொழி

கம்பன் என்றொரு கவிஞனும்
கர்ஜித்த பாரதி என்னும் புலவனும்
கருதுமிழ்ந்து கவிதை தந்த பாரதிதாசனும்
கண்ணதாசன் என்னும் கவியரசனும்

எப்போதும் அணைத்துக் கொண்ட மொழி
எப்பொழுதும் கவிபாடிக் களித்த மொழி
என்னுடல் கருகிச் சம்பலாகினாலும்
என் சம்பலோடு பூத்து கமழ்ந்திருக்கும் தமிழ் மொழி

தமிழ் மொழி பற்றிய கவிதை:

tamil kavithai lyrics

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்.

மகாகவி – பாரதியார் கவிதை.

Tamil Moli Kavithai:

tamil moli kavithai

உயிர் நாவில் உருவான
உலகமொழி
நம் செம்மொழியான
தமிழ் மொழியே

தமிழ் மொழியின் சிறப்பு கவிதைகள்:

அன்புப் பெற்றோர் ஆசையாய்க் குலவி
என்பிலும் உறைய ஊற்றிய மொழி
என் தமிழ் மொழி மனதில்
தேன் பாய்ச்சும் தினம்தினமாய்.

திக்குத் தெரியாத காட்டிலும் மனம்
பக்குப் பக்கென அடித்த போதும்
பக்க பலமாய் மரக்கலமாய் நான்
சிக்கெனப் பிடிக்கும் என் தமிழ் மொழி.

பிற மொழிக் கடலில் நான்
நிற பேதம், பல பேதத்தில் புரளும்
திறனற்ற பொழுதிலும் என் தமிழ்
பிறர் உதட்டில் தவழ்ந்தால் மனமுரமாகும்.

கைகாட்டி, நீர்த் தெப்பம், வாழ்வின்
வழிகாட்டி என்று என்னை நிதம்;
தாலாட்டி மகிழ்வில் தினம்
சீராட்டும் என் தமிழ் மொழி.

கூன் விழாத மொழி, புலத்தில்
ஏன், வீணென்;பாரும் உண்டு. – முதுகு
நாண் போன்ற தமிழ் தமிழனுக்கு.
தன்மான அடையாளம் என் தமிழ் மொழி

Tamil Moli Kavithaigal:

tamil moli kavithaigal

இனிமை கூட்டும் இன்பமொழி
இளமை காக்கும் அருமைமொழி
துன்பம் போக்கும் துடிப்புமொழி
நன்மை விளைக்கும் நற்செம்மொழி

தமிழ் மொழி பற்றிய கவிதை

தமிழுக்காக தலைவணங்கும் என் சிரம்
தமிழ் வளர என் உடல் ஆகட்டும் உரம்..

Tamil Moli Kavithaigal:

இலக்கண பொருளின்
அணிச்சிறப்பாய் அளவெடுத்த
செய்யுள் மொழியே
நம் தாய் மொழியாம்

Tamil Moli Kavithai:

தமிழ் கவிகள்
ஒவ்வொருவரும்
தெரிவிக்கும் கருத்துக்கள்
ஆயிரம் ஆயிரம்!

தமிழ் மொழி கவிதை:

வ‌ட‌மொழி ய‌டைத்த‌ மாம‌றைக் க‌த‌வினைத்
திட‌முட‌ன் திற‌ந்த‌ தேன்மொழி என‌து!

மும்மையை யுண‌ர்த்தி முப்பொருள் காட்டும்
செம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் என‌து!

பொல்லாப் பிள்ளையி ன‌‌ருளினால் ந‌ம்பிமுன்
தில்லையிற் க‌ண்ட‌ திருமொழி என‌து!

ஆறுசேர் ச‌டையா ன‌வைமுன‌ம் அணிபெற‌
நீறுசேர் சேர‌ர் நிக‌ழ்த்திய‌ தீந்த‌மிழ்!

த‌த்துவ‌ம் யாவும் த‌மிழ்மொழி யுண‌ர்த்த‌லால்
ச‌த்திய‌ஞ் செய்வேன் என்தாய்மொழி அதுவே!

தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement