தாய்ப்பால் பற்றிய கவிதைகள் – Breastfeeding Quotes in Tamil
தாய்ப் பால் அல்லது தாயின் பால் என்பது ஒரு பெண்ணின் மார்பகத்தில் அமைந்துள்ள பாற்சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் பால் ஆகும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்கான முதன்மை ஆதாரமாகத் தாய்ப்பால் உள்ளது, இதில் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட்கள் மற்றும் மாறக்கூடிய தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன.
இத்தகைய தாய்ப்பாலை ஒவ்வொரு தாய்மார்களும் தங்கள் குழந்தைக்கு வழங்கவேண்டியது அவசியமாகும். இன்றிய கால கட்டத்தில் கற்பக காலத்தில் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதினால் பெரும்பாலான தாய்மார்களுக்கு சரியாக தாய் பால் சுரப்பதில்லை. இதன் காரணமாக பாட்டில் பாலினை குழந்தைக்கு வழங்குகின்றன. இந்த சூழ்நிலை ஏற்படுத்தற்கு முக்கிய காரணம் அந்த தாய் தான். கர்ப்ப காலத்தில் சரியாக சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு. இதன் மூலம் உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் நல்ல ஆரோக்கியமாக வளரும், உங்களுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
சரி இந்த பதிவில் தாய்மையை போற்றும் வகையில் தாய்ப்பால் குறித்த சில வசனங்களை பார்க்கலாம் வாங்க.
Breastfeeding Slogan in Tamil:
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்
தாய்ப்பால் கொடுக்க வேண்டும்,
தாய்ப்பால் உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு
சக்தி அளித்து பாதுகாக்கிறது!
தாய்ப்பால் பற்றிய ஸ்லோகம்:
முதல் ஆறு மாதங்கள் வரை
புதிதாக பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பாசம் மற்றும் தாய்ப்பால்த் தவிர
வேறு எதற்கும் அவசியம் இல்லை..!
Breastfeeding Quotes in Tamil:
ஆகஸ்ட் 1 – ஆகஸ்ட் 7
தாய்ப்பால் வாரம்
மனிதன் மட்டும் அல்ல
எல்லா உயிரினங்களும் தான்
பெற்றெடுக்கும் அனைத்து
குட்டிகளுக்கு முதல் உணவாக
தாய்ப்பாலை தான்
வழங்குகிறது
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் கவிதை
தாய்ப்பால் பற்றிய கவிதைகள்:
தாய்ப்பால் தருவதற்குகான சக்தி
உலகின் மிகப்பெரிய அதிசயங்களில் ஓன்று.
உண்மையான அன்பைப் பற்றியது அது.
அது இரு புதிய உயிரை வளர்ப்பதற்கான
மகிழ்ச்சி கொண்டாட்டம்.
ஒரு பெண்ணாக இருப்பதன் மகத்துவம் அது,
Breastfeeding Slogan in Tamil:
தாய்ப்பால் கொடுப்பதில் குழந்தை
பாலை மட்டும் பெறுவதில்லை, நமது
ஆற்றலையும் சேர்த்தே பெறுகிறது.
தாய்ப்பால் பற்றிய ஸ்லோகம்:
சரியாக தாய்ப்பால் கொடுப்பதன்
மூலம் வருடத்திற்கு 1 மில்லியன்
குழந்தைகளை மரணத்திலிருந்து
காக்கமுடியும்.
Breastfeeding Quotes in Tamil:
என் உடல், என் உயிர், என்
குழந்தையின் உலகம் எனும்போது.
நான் இனி உலகில் வாழும் ஒரு
பொருளல்ல; நானே ஒரு உலகம்.
தாய்ப்பால் பற்றிய கவிதைகள்:
ஈரைந்து மாதம் எடையோடு சுமந்தவள்
நிலையறியும் பருவம் வரை எனக்கென
வாழ்ந்தவள் என் இரு கண்கள் உறங்கிட
அவள் விழிகள் விழித்துக்கொள்வாள் என்
பசியை தீர்த்திட உடலின் உதிரத்தை பாலாக
அன்பின் வடிவில் எனக்கூடிய தெய்வம்❤️❤️❤️
Breastfeeding Quotes in Tamil:
பாலூட்டுவதில்தான் ஒரு பெண்
தன் தாய்மையை கண்ணெதிரே
கண்டு உணர்கிறாள்; அதில் ஒவ்வொரு
கணமும் மகிழ்ச்சியே.
Breastfeeding Slogan in Tamil:
தாய்ப்பாலூட்டியதில் எனது
எடையின் பெரும்பகுதியை நான்
இழந்தேன், பிறரையும் அதைச் செய்ய
நான் ஊக்குவிக்கிறேன். இது
குழந்தைக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லது.
தாய்ப்பால் பற்றிய ஸ்லோகம்:
புட்டிப்பால் குழந்தையின்
வயிற்றை நிரப்பலாம்,
ஆனால் தாய்ப்பால் தான்
ஆன்மாவை நிரப்புகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மகள் அம்மா பற்றிய கவிதை
Breastfeeding Slogan in Tamil:
பாலூட்டுவது பெண்களின்
மார்பழகைக் குறைக்காது; அது
அவர்களை மகிழ்வூட்டி அழகை
கூட்டுகிறது.
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |