Moovarna Kodi Kavithaigal | மூவர்ணக் கொடி கவிதைகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மூவர்ணக் கொடி கவிதைகள் (Moovarna Kodi Kavithaigal) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். ஒவ்வொரு நாட்டிற்கும் அடையாளமாகவும், போராட்ட வீரர்களின் உயிர் மூச்சாகவும் இருப்பது நாட்டின் தேசிய கொடிதான். நம் நாட்டின் தேசிய கொடி மூன்று வண்ணங்களில் உள்ளதால், இதனை மூவர்ண கொடி என்றுஅழைக்கப்படுகிறது.
மூவர்ணக் கொடியில் உள்ள ஒவ்வொரு நிறமும் ஒரு அர்த்தத்தை பிரதிபலிக்கிறது. 1947-ம் ஆண்டு ஆங்கிலேய நாட்டின் தேசிய கொடியை வீழ்த்தி சுதந்திர இந்தியாவின் கொடியை செங்கோட்டையில் ஏற்றப்பட்டது. நமது நாட்டின் விடுதலைக்காக போராடிய பல்வேறு தியாகிகள் செய்த அர்ப்பணிப்பின் அடையாளமே இந்திய தேசியக் கொடி. மூவர்ணக் கொடி பற்றிய கவிதைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
மூவர்ணக் கொடி கவிதைகள் :
மூண்டெழும் வான்புகழ் முழங்கையிலே
மூவர்ணக் கொடி உயர்ந்திடுதே!
ஈன்றவள் தளைகள் நீங்கிடவே
ஈந்தவர் நினைவுகள் நிழலிடுதே!
காவியும் வெண்மையும் நம் குணங்கள்;
கண்கவர் பச்சை மண் குணங்கள்;
நீலத்தில் சக்கர ஆரங்கள்
நீதியை குறித்திடும் சாரங்கள்.
‘’வலிமை வெல்லும்’’ என்பார் முன்
‘‘வாய்மையே வெல்லும்’’ என்றுரைத்தோம்
‘‘வாழ்வதற்காய் அழி’’ என்றவர்க்கு
‘‘வாழு, வாழ விடு’’ என்றோம்.
மாநிலம் சேர்ந்தொரு நாடானோம்;
மலர்க் கண்ணிகள் சேர்ந்தொரு சரமானோம்;
உண்ணிகள் உட்புக சதி புனைந்தால்
உருத்தெரியாமல் உடைத்தெறிவோம்!
அகர வரிசையில் சுதந்திர தின கவிதைகள் 2024..!
தேசிய கொடி கவிதைகள்:
மூவர்ணம் தாங்கி..!
தியாகம், அன்பு, கருணை ஓங்கி.!
போரை வெறுத்த அசோகரின்
இருபத்தி நான்கு
தர்ம வாசகங்கள் தாங்கி.!
அண்ணல் அம்பேதக்கரால்
இந்திய சட்டம் வகுத்து
அண்ணல் காந்தியின்
அகிம்சை வழியிலே.!
கத்தியின்றி.! இரத்தமின்றி.!
சுதந்திர போரை வென்றெடுத்த
வெற்றியாளர்களின் உதிரத்தை
நம் தேசிய கொடி மரத்தின் கீழ்
உரமாய்..! வித்தாய்.!
புதைந்து கிடக்க
விண்ணை தொட
சிறகை வீசி பறக்கிறாய.!
சும்மாவா கிடைத்தது சுதந்திரம் கவிதை
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |