உழவர் திருநாள் பற்றி 10 வரிகள்.!

Advertisement

10 Lines About Ulavar Thirunal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உழவர் திருநாள் பற்றிய 10 வரிகளை கொடுத்துள்ளோம். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் முதன்மையானது பொங்கல் பண்டிகை. தமிழர்களின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. பொங்கல் பண்டிகை தொடர்ந்து 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். முதல் நாள் போகி பண்டிகை. பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகியாகும். விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இரண்டாவது நாள் தைப்பொங்கல் அதாவது பெரும்பொங்கல் என்று கூறுவார்கள். தை முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இந்நாளில், இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி செலுத்தி பொங்கல் வைத்து சூரியனை வணங்குவார்கள்.

மூன்றாவது நாள், மாட்டு பொங்கல். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள், அதாவது நான்காவதாக கொண்டாடப்படும் பண்டிகை உழவர் திருநாள்.இந்நாளை கன்னி பொங்கல் என்றும் கூறுவார்கள். உழவர் திருநாள் பற்றிய விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உழவர் திருநாள் வாழ்த்துக்கள் கவிதை.!

உழவர் திருநாள் பற்றி 10 வரிகள் | Ulavar Thirunal Meaning in Tamil:

  1. தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைகளில் நான்காவது நாளாக கொண்டாடப்படுவது தான் உழவர் திருநாள்.
  2. உழவர் திருநாள் என்பது, உழவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை கௌரவிக்கும் நாள் ஆகும்.
  3. இது தமிழர் மரபையும் விவசாயத்தின் பெருமையையும் உலகிற்கு எடுத்துச் செல்லும் பண்டிகையாகும்.
  4. களர் நிலத்தையும் தம் உழைப்பால் உழுது நல் கழனிகளாக்கும் தூய தொழில் செய்பவரே உழவர்! என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
  5. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
    தொழுதுண்டு பின் செல்வார்” – என்றார் திருவள்ளுவர். இத்தகு உயர்ந்த மதிப்பிற்குரியவர்கள் உணவை விளைவித்துத் தரும் உழவர்கள்!
  6. அத்தகைய பெருமையுடைய உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் திருநாளே உழவர் திருநாள்.
  7. உழவர்கள் சேற்றில் கை வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது காலம் காலமாய் சொல்லிவரும் வாழ்வியல் மொழி.
  8. உழவனின் மேன்மையை உணர்ந்ததால்தான் அக்காலம் முதல் இக்காலம் வரை கவிஞர் பெருமக்கள் உழவர்களை வாழ்த்துகிறார்கள்! வணங்குகிறார்கள்! அதுமட்டுமில்லாமல் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதி.
  9. உழவர்களுக்கும் அவர்களது உழைப்பிற்கு உறுதுணையாய் இருப்பவர்களுக்கும் நன்றி தெரிவித்து அதன் வாயிலாக அவர்களது நல்ஆசிகளை நாம் பெறுவதற்கு ஏதுவாக நாம் கொண்டாடுவதே உழவர் திருநாளாகும்.
  10. “ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவும் இல்லை” என்ற வாக்கிற்கு இணங்க உழவுத் தொழிலை விட மகிமையான தொழில் உலகில் எதுவும் இல்லை. அத்தகைய தொழிலை செய்து வரும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தி உழவர் திருநாளை கொண்டாடுவோம்.

Uzhavar Thirunal Vazhthukkal in Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement