Agara Varisaiyil Suthanthira Thina Kavithai | அகர வரிசையில் சுதந்திர தின கவிதைகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சுதந்திர தினம் பற்றி கூறக்கூடிய அகரவரிசை கவிதை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். நம் நாடு பலபேரின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு தான் சுதந்திரம் பெற்றது. நாட்டின் சுதந்திற்காக உயிர் விட்ட தியாகிகள் பலர். அவர்கள் இரத்தம் சிந்தி நாட்டிற்கு விடுதலை பெற்று தந்ததனால் தான் இன்று நாம் அனைவரும் நாட்டில் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த நாள், பலரின் இரத்தம் மண்ணில் சிந்த பலரும் மகிழ்ந்த நாள். அதுவே நாடு சுதந்திரம் பெற்ற நாள். அந்த மகிழ்ச்சியான நாள் பற்றிய கவிதைகளை அகர வரிசையில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
78 -வது சுதந்திர தினத்தின் கருப்பொருள் 2024 என்ன.?
அகர வரிசையில் சுதந்திர தின கவிதைகள் 2024:
சுதந்திர தினம்..!
அடிமைத்தனம் அருந்த தினம்..!
ஆங்கிலேயர் ஆட்சி முடிந்த தினம்.!
இந்தியா விடுதலை அடைந்த தினம்.!
ஈடில்லா தியாகம் பலித்த தினம்.!
உலகம் அகிம்சையை வியந்த தினம்.!
ஊரெங்கும் மகிழ்ச்சி வழிந்த தினம்.!
எத்திக்கும் ஆனந்தம் நிறைந்த தினம்.!
ஏற்றத்தின் முதல்படி அமைந்த தினம்.!
ஐயமின்றி சரித்திரம் படைத்த தினம்.!
ஒற்றுமையின் வலிமையை உணர்ந்த தினம் .!
ஓங்கு புகழ் பாரதம் நிமிர்ந்த தினம்.!
ஒளவை வழி நாடாய் மிளிர்ந்த தினம்.!
இஃது இந்தியாவின் இனிய சுதந்திர தினம்.!
அனைவருக்கும் 78 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!
சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2024..!
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |