அகர வரிசையில் உழவர் திருநாள் கவிதைகள்.!

Advertisement

Agara Varisaiyil Ulavar Thirunal Kavithai

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அகர வரிசையில் உழவர் திருநாள் கவிதைகளை எழுதி கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு 2025 ஜனவரி 16 ஆம் தேதி (தை 03) உழவர் திருநாள் வருகிறது. அன்றைய தினம் அணைத்து உள்ளவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க மறக்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் சேற்றில் கை  வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியம். ஆகையால், உழவர் திருநாளில் உங்களின் அன்பான வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

உழவர்களுக்கும் அவர்களது உழைப்பிற்கு உறுதுணையாய் இருப்பவர்களுக்கும் நன்றி தெரிவித்து அதன் வாயிலாக அவர்களது நல்ஆசிகளை நாம் பெறுவதற்கு ஏதுவாக நாம் கொண்டாடுவதே உழவர் திருநாளாகும்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்”

என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால்,மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது. என்பதே இதன் பொருள். எனவே, நாம் உணவு உண்பதற்கு, உணவினை விளைவிக்கும் உழவர்களுக்கு இன்றைய நாளில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.

உழவர் திருநாள் வாழ்த்துக்கள் கவிதை.!

அகர வரிசையில் உழவர் திருநாள் கவிதை:

அதிகாலைத் துயிலெழுவான்.!
ஆதவனை தொழுதிடுவான்.!
இன்முகமாய் வயல் புகுவான்.!
ஈதலையும் மனம் கொள்வான்.!
உழுது மண் நெகிழ்த்துடுவான்.!
ஊக்கமுடன் உழைத்திடுவான்.!
எரு விடவும் தேர்ந்திடுவான்.!
ஏர் கொண்டு உழுதிடுவான்.!
ஐயமுறும் களை களைந்திடுவான்.!
ஒழுங்கு நிலை நிறுத்திடுவான்.!
ஓடும் நீர் பாய்ச்சிடுவான்.!
ஒளவை வழி வாழ்ந்துடுவான்.!
இஃது வழி வாழ்ந்து உயர்ந்திடுவான்.!

Agara Varisaiyil Ulavar Thirunal Kavithai

உழவர் திருநாள் பற்றி 10 வரிகள்.!

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement