Childrens Day Quotes in Tamil | குழந்தைகள் தினம் பற்றிய பொன்மொழிகள்
இன்றைய காலகட்டத்தில் அனைத்திற்கும் ஒரு தினத்தை வைத்து கொண்டாடப்படுகிறது. அதேபோல் தான் குழந்தைகள் அனைவருமே மிகவும் ஆர்வமாகவும், ஆவளாக காத்திருக்கும் ஒரு தினம் தான் குழந்தைகள் தினம். அதாவது நேருவின் பிறந்தநாளினை தான் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த ஒரு தகவல் தான். அதனாலேயே குழந்தைகள் நேருவை குழந்தைகள் செல்லமாக நேரு மாமா என்று அழைக்கிறார்கள். குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த பொருள்களை வாங்கி கொடுத்து மகிழ்விப்பார்கள்.
இதனால் குழந்தைகள் மிகவும் சந்தோஷத்தில் அன்றைய நாளில் மூழ்கி இருப்பார்கள். அன்றைய நாளில் குழந்தைகளுக்கு வாழ்த்து கூற உதவும் சில வாழ்த்து கவிதைகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள கவிதைகளை பகிர்ந்து மகிழுங்கள்.
வாழ்க்கைக்கான தன்னம்பிக்கை கவிதைகள்
குழந்தைகள் தினம் பற்றிய பொன்மொழிகள்:
ஏமாற்றம் தெரியாது
திருட்டு தெரியாது
சாதிமதம் தெரியாது
பொய் பேச தெரியாது
அழகு தெரியாது
அவமானம் தெரியாது
அடித்தால் அழ தெரியும்
அணைத்தால் சிரிக்க தெரியும்
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.!
ஒரு சொல் பேச்சிலே
உள்ளம் மகிழ வைத்து
கள்ளமில்லா சிரிப்பினிலே
நெஞ்சம் நெகிழ வைக்கும்
மழலைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.!
இறைவன் படைத்து இயல்பு
கெடாமல் தொடரும் பட்டியலில்
என்றும் இருக்கிறது குழந்தையின் சிரிப்பு
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
Childrens Day Quotes:
கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதும்!
அன்பு குழந்தைகளுக்கு
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..!
Childrens Day Kavithaigal in Tamil:
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர்.
குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..!
Childrens Day Kavithaigal:
இன்றைய குழந்தைகள்
நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..!
Childrens Day Kavithai in Tamil:
இந்த உலகத்தை ஒளிரட்ச் செய்யும்
ஒளி நீங்கள், உங்கள் எதிர்காலம்
பிரகாசமாக இருக்கட்டும்.
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..!
மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்
Childrens Day Kavithai:
அனைத்துக் குழந்தை செல்வங்களும்,
நாட்டின் வருங்கால தூண்கள்.
இந்தியாவின் வருங்கால தூண்களுக்கு
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..!
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |