வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கிறிஸ்துமஸ் கவிதைகள் | Christmas Quotes In Tamil 

Updated On: December 16, 2025 1:21 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Christmas Quotes In Tamil 

இன்றைய பதிவில் கிறிஸ்துமஸ் கவிதைகள் பற்றி பார்க்க போகிறோம். இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை தான் வருடா வருடம் அனைவரும் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறோம். இயேசு பிறந்த ஆண்டானது சரியாக இன்று வரை தெரியவில்லை என்பதால் கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி வைத்துள்ளார்கள். கிறிஸ்து பிறப்பு விழாவை எட்டாம் நூற்றாண்டிலிருந்து கிழக்கிந்திய சபையும் பதினோராம் நூற்றாண்டிலிருந்து மேற்கிந்திய சபையும் கொண்டாடத் ஆரம்பித்தார்கள். 

மேலும், கிறிஸ்துமஸ் என்றவுடன் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, கிருஸ்துவ நண்பர்கள் வீட்டில் கேக் வெட்டுவது மற்றும் தடபுடலாக விருந்து. இவை தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். அந்த இனிய நாளில் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை வழங்கி உற்சாகமாக ஆடி மகிழ்வார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் கிறிஸ்துமஸ் கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாங்க….

கிறிஸ்துமஸ் கவிதைகள்:

கிறித்துமஸில் காதல் இறங்கியது:

கிறித்துமஸில் காதல் வந்தது, 

அன்பே அன்பே தெய்வீக அன்பு;

காதல் கிறித்துமஸில் பிறந்தது;

நட்சத்திரமும் தேவதைகளும் அடையாளத்தை கொடுத்தனர். 

நாங்கள் கடவுளை வணங்குகிறோம்,

அவதார அன்பு, தெய்வீக அன்பு 

எங்கள் இயேசுவை வணங்குவோம் 

ஆனால் புனித அடையாளத்திற்கு எதற்கு 

எங்கள் அன்பு அடையாளமாக இருக்கும் 

அன்பு உன்னுடைத்தாகவும், அன்பு என்னுடையதாகவும் இருக்கட்டும்,

கடவுள் மீதும் எல்லா மனிதர்கள் மீதும் அன்பும், 

கெஞ்சல் பரிசு  மற்றும் அடையாளத்திற்கான அன்பு

Chrishthumas quotes :

அன்பு மனம் மலர்ந்திட 

அகிலத்தில் பாவம் மறைந்திட 

உதித்த இளம் விடியலே!

மார்கழி பனியில் 

மாட்டு தொழுவத்தில் 

பிறந்த புனித ஒளியே!

 

வைரங்கள் கோடி 

சேர்த்து 

வைக்கோலின் மீது 

அமர்த்தி 

புன்னைகையென்னும் 

பூவிதழ் சேகரித்து 

துன்பம் என்னும் 

கர்வம் தொலைத்து 

இன்பம் என்னும் 

மணிமுடி தந்த 

மகராசன் பிறந்த நாள் 

 

அன்பென்னும் பண்புகளை 

ஆணித்தனமாய் சொல்லிட 

ஆயுளையே அவர் கொடுத்தார் 

அவர் பிறந்தநாளில்

 அறியாமையை போக்கிடுவோம் 

பகைமையை அறுத்தெறிந்து 

பாசமோடு வாழ்ந்திடுவோம் 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com







Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now