அப்பா கவிதை வரிகள் | Dad Quotes in Tamil..!

அப்பா கவிதை வரிகள் | Dad Quotes in Tamil

பெண் பிள்ளைகளுக்கு முதல் ஹீரோ என்றால் அது அப்பா தான். ஒரு அம்மா பெண் குழந்தையை 10 மாதம் சுமந்து பெற்றெடுத்தலும் கூட அந்த குழந்தைக்கு அம்மாவை விட அப்பாவின் மீது தான் அளவுகடந்த ஒரு பாசம் வருகிறது. அதுபோல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பிள்ளையின் நலன், ஆசை இவற்றை எல்லாம் பற்றி யோசித்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன் என்றால் அது அம்மா அப்பா மட்டுமே. அவர்கள் இருவருக்கும் நிகராக யாரும் ஈடு கொடுக்க முடியாது என்பது தான் உணர முடிந்த ஒரு உண்மை. அப்பா, அம்மாவை பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்று தான் கூற வேண்டும். அதனால் இன்றைய பதிவில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் முன் மாதிரியாக இருக்கும் அப்பா பற்றிய கவிதை வரிகளை படத்துடன் பார்க்கப்போகிறோம்.

அப்பா கவிதை வரிகள்:

தந்தையின் கடல் அளவு கோபம் கூட
நொடிப்பொழுதில்
அடங்கி விடுகிறது
தன் மகளின்
சிறு கண்ணீர் துளிகளில்..

dad quotes in tamil

Appa Kavithai in Tamil:

வெறும் மூன்று எழுத்துக்களில்
அனைத்து பாசத்தினையும்
உணர வைக்கும்
ஒரே உறவு அப்பா மட்டுமே..!

 appa kavithai in tamil

Appa Kavithaigal:

அடி முடி தேடினாலும்
அகராதியை புரட்டினாலும்
முழுமையான அர்த்தம்
அறிய முடியாத
உயிர் சித்திரம் அப்பா..

appa kavithaigal

அப்பா கவிதைகள் தமிழ்:

பெண் பிள்ளைகளுக்கு
முதல் நண்பனும், சிறந்த நண்பனும்
என்றும் அப்பா மட்டுமே

dad tamil kavithai

Dad Tamil Kavithai:

தோலில் நம்மை சுமந்து கொண்டு
சுமை தெரியாமல் சிரித்து கொண்டே
வெறும் சந்தோசத்தை மட்டும் அளிக்கும்
விலை மதிக்க முடியாத உறவு அப்பா

dad tamil kavithai

 

விலகி செல்லும் கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL