இயற்கை பற்றிய கவிதை வரிகள் | Nature Quotes in Tamil
Iyarkai Kavithai in Tamil: இயற்கையை விரும்பாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். நமது உடலுக்கு மிகவும் தேவையான ஆக்சிஜன் காற்றானது இயற்கை வளங்கள் மூலமே நமக்கு கிடைக்கிறது. இயற்கையானது பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். அப்படிப்பட்ட இயற்கை வளங்களை நாம் இப்போது வளர்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் இயற்கை நிலங்கள் அனைத்திலும் வீடாக மாறிவிட்டன. இயற்கை வளம் குறைவாகிவிட்டதால் நிலநடுக்கம் அதிகமாகிவிட்டது. இயற்கை வளங்களை அழிக்காமல் பாதுகாத்து வந்தோம் என்றால் நாட்டிற்கும் நல்லது, வீட்டிற்கும் நல்லது. எனவே மரங்களை அழிப்பதை விட்டுவிட்டு இயற்கையை காப்போம். இந்த பதிவில் இயற்கை பற்றிய கவிதை வரிகளை இமேஜ் மூலம் டவுன்லோடு செய்ய பயனுள்ளதாக இருக்கும். வாங்க இயற்கை பற்றிய இமேஜேஸ்களை பார்க்கலாம்.
மழை கவிதை |
விவசாயம் கவிதை |
இயற்கை கவிதை:
வா வாசமில்லா மலர்களுக்கும்
வாசம் கொடுப்போம்
நேசமில்லா நெஞ்சங்களிலும்
அன்பை விதைப்போம்
துயர் வரும் வேளைகளில்
தோள் கொடுப்போம்
இயற்கையை
தாய் போல் கண்டு மதிப்போம்
இயற்கை கவிதை வரிகள்:
இயற்கை நம் முன்னோர்கள்
நமக்கு விட்டு சென்ற பரிசு
இயற்கையை காப்போம்
நல்ல இயற்கையை விட்டு செல்வோம்
அடுத்த தலைமுறைக்கு பரிசாக
Nature Quotes in Tamil:
இயற்கை அழகு தான்
எத்தனை யுகம் கடந்தாலும்
அழியா வரம் பெற்ற
இறைவனின்
அற்புத படைப்பு
அன்பு கவிதை வரிகள் |
இயற்கை பற்றிய கவிதை வரிகள்:
இந்த உலகில் நிரந்தரமானவர்
என்று எவரும் கிடையாது
நிரந்தரமானது இயற்கையும்
இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே
இயற்கை கவிதை வரிகள்:
பசுமையின் நடுவே
பரவச பயணம்
பார்ப்பவை எல்லாம்
மனதை மயக்கும்
இயற்கை
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |