கல்வி கண் திறந்த வள்ளல் கவிதை | Kalvi Kan Thirantha Kamarajar Kavithai in Tamil

Advertisement

கல்வி கண் திறந்த வள்ளல் கவிதை | Kalvi Kan Thirantha Kamarajar Kavithai 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கல்வி கண் திறந்த வள்ளல் கவிதை (Kalvi Kan Thirantha Kamarajar Kavithai in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். கல்வி கண் திறந்த வள்ளல் காமராசர் ஆவார். கர்மவீரர் காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார். 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

இவர் வாழ்ந்த இந்த காலத்தில் பல சாதனைகளை செய்துள்ளார். அவற்றில் ஒன்று தான் கல்வி. ஏழை மாணவர்களுக்கு கல்வியை அளித்தார். இவரை பற்றி கவிதை வடிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நாடு பார்த்ததுண்டா பாடல் வரிகள்

Kalvi Kan Thirantha Kamarajar Kavithai in Tamil:

கல்விக் கண் திறந்ததினால்
எங்கள் கல்வித் தந்தை ஆனீர்..!
எளிமை வாழ்க்கை வாழ்ந்ததினால்
ஏழைகளின் ஏந்தலானீர்..!
அரசியலில் நேர்மைதனை காத்ததினால்
அரசியலுக்கே ஆசானானீர்..!
பல தொழிற்சாலைகள் திறந்ததினால்
நாட்டின் தொழிற்தந்தை ஆனீர்..!
நீரணைகள் கட்டியதால் தாகம்
தீர்த்த தீர்க்கதரிசியானீர்..!

பஞ்சமர்களும் பணிந்து கிடக்கவிருந்த
குலக்கல்வி திட்டத்தினை அழித்தீர்..!
பாமரக் குழந்தைகளும் கல்வி பயில
பல கல்வி சாலைகள் படைத்தீர்..!
மதிய உணவுத் திட்டம் படைத்து
மகத்தான வெற்றி பெற்றீர்..!
கடைக்கோடி ஏழையும் பயனுற
ஏற்ற பல திட்டமமைத்தீர்..!

உம் போன்ற ஓர் ஒப்பற்ற தலைவனை
இத்தமிழ்நாடு மட்டுமல்ல
எந்நாடும் கண்டதில்லை ஐயா..!
அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினை
யாரும் வாழ்ந்ததில்லை ஐயா..!
நீ பிறந்த இந்நாட்டில்
நானும் பிறந்திருக்கிறேன் என
நினைத்து பேருவகை கொள்கிறேன்..!
நீ பிறந்த இந்நாளில்
உன்னடி தொட்டு உன் வழி
நடக்கின்றேன் ஐயா..!

காமராஜர் பற்றிய 2 நிமிட பேச்சு

கல்வி கண் திறந்தவர் கவிதை:

சரித்திரத்தில் நீங்கா கர்ம வீரனே!
ஆலைகள் செய்தாய்
கல்விச் சாலைகள் செய்தாய்!

ஆடு மேய்க்கும் சிறுவன் படிக்க மதிய உணவு திட்டம் தந்து அற்புதம் செய்தாய்!

மாடு மேய்க்கும் குழந்தை கையில் கைத்தடி பிடுங்கி!

மதிவளர்கும் காகித புத்தகம் தந்தாய்!

ஆலமரமாய் விழுது விட்ட அரசு பள்ளிகள் எல்லாம்
அடியோடு சாய்கிறது
இந்த நாளில்!

கல்வி வியாபாரம்
கொடி கட்டி பறக்குது!
கள்ளுக்கடை வியாபாரம் அரசாங்கம் நடத்துது!

கர்ம வீரனே நீ எழுந்து வா!

சரித்திரம் நிறைந்த தமிழ் மண்ணில்
தரித்திர ஆட்சி நடப்பதுவோ!

சாதி சண்டை
மத சண்டை
அரசியல் ஆச்சி இன்று
நாட்டை பற்றி யோசிக்காமல் பதவி மோகம் உண்டு!

உனக்கு கிடைத்த பதவியை இன்னொருவருக்கு தந்த மனசு இன்று எவருக்கும் இல்லை!

பதவிக்காக செய்கின்றார் கொத்து கொத்தாய் கொலை இன்று!

சிறப்பான செய்தியெல்லம் மலையேறி போச்சு!

சாதி சாண்டை மத சண்டை சிறப்பு செய்தி ஆச்சி!

சாதி மத வாக்கு வங்கி அரசியல் நோக்கம் ஆச்சி!

நாட்டினிலே நடத்தவில்லை உன் போல் ஒரு ஆட்சி!

உன்னை நினைத்து விடுகிறோம் நாங்கள் பெருமூச்சு!

அணைகள் கட்டி நீரு சேமித்தாய்!
குளம் வெட்டி காடு வளர்த்தாய்!
நீ செய்த திட்டமெல்லாம் கானல் நீர் ஆட்சி!

எதிர்கால தலைமுறைக்கு எதிர்காலம் இல்லை என்ற நிலை ஆச்சு!
மணல் கொள்ளை நடக்குது ஆறு வரண்டு கிடக்குது!

ஆனாலும் அரசியல் வாதி பிள்ளைகள் செழிப்பாக இருக்குது!

பிள்ளை பெறாத தியாகம் செய்த உன் வாழ்க்கை சரித்திரமாய் இருக்குது!

காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement