Kamarajar Kavithai Potti
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். காமராஜர் பிறந்த நாள் தின கவிதைகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். காமராஜர் பிறந்தநாள் ஜூலை 15 ஆம் தேதி ஆகும். காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார். ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவர், முதல்வராக இருந்தபோது பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஒரு மனிதனுக்கு கல்வி, செல்வம் தான் முக்கியம் என்பார்கள். ஆனால், காமராஜர் அவர்கள் ஏழை குடும்பத்தில் பிறந்ததால் அவரால் படிப்பை தொடர முடியவில்லை. 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் பல்வேறு சாதனைகள் செய்து இந்த உலகத்தையே திரும்பி பார்க்க செய்தார். இவர், 1975 ஆம் ஆண்டில் அக்டோபர் 02 ஆம் தேதி இயற்கை எய்தினார். அதன் பிறகு, 1976 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. காமராஜர் பிறந்தநாள் வாழ்க்கை முறையை கவிதையாக பார்க்கலாம் வாங்க.
காமராஜர் பற்றி பலருக்கும் தெரியாத அரிய தகவல்கள்.!
காமராஜர் பிறந்த நாள் தின கவிதைகள்:
கர்ம வீரரே:
ஆனித் திங்கள் பிறந்தவராம்
அகிலம் போற்ற உயர்ந்தவராம்
விருது நகர்தனில் உதித்தவராம்
விருதுகளின் நாயகராம்
வறுமை பிடியில் இருந்தவராம்
வையம் வணங்கிட வாழ்ந்தவராம்
மதிய உணவு வழங்கியவராம்
மக்கள் பசியைப் போக்கியவராம்
எளிமையின் உருவம் கொண்டவராம்
ஏழையின் துயரை துடைத்தவராம்
கல்வி தரத்தை உயர்த்தியவராம்
கருணை உள்ளம் உடையவராம்
பாசனத் திட்டம் தந்தவராம்
பாரினை செழிக்க வைத்தவராம்
கர்ம வீரர் என்றிவரை நித்தம் நாமும் பொற்றிடுவோம்
நாடு பார்த்ததுண்டா பாடல் வரிகள்
விருதுபட்டியின் வைரமே:
உன்னைப் போல் உயர்ந்தவர் இனி ஒருவர் பிறப்பாரோ
எண்ணமோ உயர்வு
எளிமையான வாழ்வு
கல்வியறிவோ குறைவு
ஆனால் நீ காலூன்ற துறையோ குறைவு
சட்டங்கள் கற்றதில்லை
பட்டங்கள் பெற்றதில்லை
திட்டங்கள் பல கோடி தந்திட்ட அறிவுப் பெட்டகமே
சத்தியமூர்த்தியின் தளபதியே
கல்விக்கண் கொடுத்த படிக்காத மேதையே
உணவுத்திட்டம் வகுத்த மகத்தானவரே
அனைகளைக் கட்டிய வல்லுனரே
தலைவர்களை உருவாக்கிய பெருந்தலைவரே
தரணியை தழைக்கச் செய்த நாயகனே
வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு காந்தியே
எளிமையின் மைந்தனே:
குமாரசாமி சிவகாமியின் மைந்தனே
கர்மவீரறாய்” காலத்திலும் நிற்பவரே
படிப்பின் அவசியம் உணர்ந்த “படிக்காத மேதையே
“பாரத ரத்னா விருது”ம் தேடி வந்ததே உன்னை தேடி
படிக்கும் பிள்ளைகளின் பசியை உணர்ந்தவரே
இலவச உணவை வழங்கி இன்புற்றவரே
எளிமைக்கும் நேர்மைக்கும்
எடுத்துக்காட்டாய் விளங்கியவரே
பதவி சுகம் இல்லாத
பண்பட்ட மானிடனே
“பெருந்தலைவர்” எனும்பட்டம்
போற்ற வேறு யாருமுண்டோ
மூன்று முறை தமிழக
“முதலமைச்சராய்” இருந்தும் கூட
முழுமையான வீடும் இல்லை
வசதியாக வாழவுமில்லை
வாழ்ந்த காலம் எல்லாமே
வாடகை வீட்டில்தானே
கருப்பு காந்தியாக
காதர் உடுத்தி வாழ்ந்து வந்தாய்
கல்வியின் நாயகனாக
காலமெல்லாம் வாழுகின்றாய்
காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்
படிக்காத மேதையே:
படிக்காத மேதையே.. இந்தியாவின் கருப்பு வைரமாய்
இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பவரே
கல்வி ஒன்றை மட்டும் கருத்தாக புகுத்தியவரே
அணைகள் பலக் கட்டித் தாகம் தீர்த்தவரே
மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி பசியைப் போக்கியவரே!
பிறர் நலம் வாழத் தன் நலம் துறந்தவரே
கடமையே கண் என வாழ்ந்தவரே
மக்கள் வளர்ச்சிக்காக மண வாழ்வில் ஈடுபடாதவரே
தான் கொண்ட கொள்கைக்காக மட்டும் உழைத்தவரே
உள்ளமும் வெண்மையே, தோற்றமும் எளிமையே,
எம் கர்ம வீரருக்கு.
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |