Kamarajar Poem in Tamil – காமராஜர் கவிதைகள் – Kamarajar Kavithai

Kamarajar Poem in Tamil

Kamarajar Kavithai In Tamil – காமராஜர் கவிதை

தமிழகத்தின் பொற்கால ஆட்சி செய்த காமராஜர் அவர்கள், 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 -ஆம் தேதி பிறந்தார். அரசியல் வாழ்க்கைக்கு முன் உதாரணமாக வாழ்ந்த அந்த ஒப்பற்ற தலைவர், மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாநிலத்தின் முதல்வராகி, பல அதிகாரப் பதவிகள் தேடி வந்தபோதும், அந்த அரியணைகளை ஏற்காமல் பிறரை அவற்றில் அமர வைக்கும் அதிகாரம் மிக்கவராக அந்த காலத்தில் வலம் வந்தார்.  இத்தகைய பெரும் தலைவருக்கு சில கவிதை வரிகளை எழுதிடலாம் வாங்க.

Kamarajar Kavithai:

அரசியலில் ஆள வந்தவரே..
விருதுநகரின் வீரனே..
வியக்கவைத்த விந்தையே..
படிக்காத மேதையே..
பல ஆயிரம் பள்ளிகளை பகிர்ந்த பகுத்தறிவு பகலவனே..
எளிமையின் ஏகாந்த தலைவனே..
ஏற்றத்தை கண்டோம் உன்னால் ஐயா..
மதிய உணவளித்த மனிதநேயம்..
மக்களின் துயர் துடைத்த மக்கள் செல்வனே..
கரை வேட்டி கட்டிய போதும் கறைபடியாத கைகள் ஐயா உமது..
அணைகள் பல கட்டி அகிலத்தை அசரவைத்த அதிசயம் ஐயா நீ..
கதர் வேட்டியுடன் வெளிநாடு சென்று தமிழனை தரணிக்கு அரங்கேற்றிய தங்கம் ஐயா..
தென்னகத்து தென்றலே! உன்னால் வடக்கையும் வெற்றிகள் குவிந்தன..
தொழிற்சாலைகள் பல தந்த தொழிலாளியின் தொண்டன் ஐயா..
பாரத ரத்னா வே..
பெருந்தலைவர் நீயின்றி வேறு உள்ளாரோ..
பாமரனின் பங்காளனே..
உண்மையின் உறைவிடமே..
புவி உள்ளளவும் புகழ் மங்கா புதையல் ஐயா நீ..
வாழ்க நீ.. என்றும் உன் புகழ் வாழ்க.. உம்மை நாங்கள் வணங்குகிறோம் ஐயா நன்றி..

காமராஜர் கவிதை:

நீ ஒருமுறை தான் ஆட்சிக்கு வந்தாய்! ஆனால் பல ஆட்சிகள் பேசும் அளவிற்கு நல்லது செய்தாய்!
எளிமைக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு! நம் தமிழ்நாட்டு மக்கள் தான் உன் உயிறும் காற்றும்!

Kamarajar Poem in Tamil:

Kamarajar Poem in Tamil

உழைப்பால் உயர்ந்த வல்லர் இவரே! ஊருக்கு உழைத்த உத்தமர் இவரே! நாட்டிற்காக வாழ்ந்த நல்லவர் இவரே!

Kamarajar Kavithai In Tamil

தன்னை மறந்து பிறரை நினைத்து தன் வீட்டையும் மறந்து நாட்டுக்காக வாழ்ந்தவர்!

பல அணைகள் கட்டி நீரைத் தேக்கியவர்! அந்நீரைக் கொண்டு விவசாயம் காத்தவர்! விவசாயம் செழிக்க மின்சாரமும் கொடுத்தவர்!

பயிர்கள் விளைந்தால் உயிர்கள் வாழும் என்பதால் பசுமை செழிக்க, பல திட்டங்கள் செய்தவர்.

பொருள் தேடலில் இவர் இறங்கவில்லை செல்வ வளத்தை இவர் சேர்க்கவில்லை அதனால்தானோ இவர் இன்றளவும் போற்றப்படுகிறார்.

பகட்டான வாழ்க்கையை மறக்க வைத்தவர் இவரே! பண்பாக வாழ்ந்து காட்டி, பல இதயங்களை தொட்டவரும் இவரே!

அழகு தமிழிலே இவரது பேச்சு… சமத்துவம் என்பதே இவரது மூச்சு…

ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் காண சேவை செய்த பெருந் தலைவர் இவரே! கல்வி சிறந்தால் நாடு செழிக்கும் என்பதால் கல்லாமை என்பதை இல்லாமல் செய்தவர் இவரே!

மனிதாபிமானம் கொண்ட தென்னாட்டு காந்தி இவர்… கதராடை அணிந்த கல்வியின் தந்தை இவர்…

தர்ம வீரரும் இவரே! கர்ம வீரரும் இவரே! தமிழகத்தில் சுதந்திர தியாகிகளில் இவரும் ஒருவரே!

 

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil