கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் | Kannadasan Kavithaigal in Tamil
கண்ணதாசன் தனது பாடல் வரிகள் மூலம் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தவர். அவரின் பாடல்கள் அனைத்தும் மக்களின் உணர்வோடு கலந்து காணப்படும். மன உளைச்சலில் இருப்பவர்கள் இவரது பாடலை கேட்டால் எப்படியும் ஆனந்தம் ஆகி விடுவார்கள். இவர் மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பல கருத்துள்ள பாடல்களை எழுதியுள்ளார். எத்தனை இசைக்கலைஞர்கள் வந்தாலும் இவரது கவிதை இன்றும் என்றும் மனதில் நின்று கொண்டுதான் இருக்கிறது. கண்ணதாசன் கவிதைகளை இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பார்க்கலாம்.
கண்ணதாசன் தத்துவ கவிதைகள்:
வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே.
வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது முடிவுமல்ல!
கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ
மற்றவரை நம்புகின்றன
துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான்.
நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன
அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
– ஓர் அனுபவசாலி
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- காந்தியடிகள்
வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே
கண்ணதாசன் கல்வி கவிதைகள்:
கல்வி என்றால் என்னவென்று கேட்டேன்
கற்றுப்பார் என்றாய்.
கண்ணதாசன் கவிதைகள்:
கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. அது மலையளவு
ஆகும் போது மனமும்
மரத்துப் போகும்..!
Kannadasan Kavithaigal in Tamil:
எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்..
வருவது மனதை
நிறைய வைக்கும்..!
Kavignar Kannadasan Kavithaigal in Tamil:
பிறப்பால் தொடரும் உறவுகள்
அல்லாமல்.. பிணைப்பால்
தொடரும் உறவுகளே
உன்னதமானவை..!
Kannadasan Quotes in Tamil:
சிறகு கிடைத்தால் பறப்பது
மட்டும் வாழ்க்கையல்ல..
சிலுவை கிடைத்தாலும்
சுமப்பது தான் வாழ்க்கை..!
கண்ணதாசன் கவிதைகள்:
காலங்கள் கடவுள் பாடும் ராகங்கள்..
அவை வீணடிக்கப்பட்டு விட்டால்
திரும்ப கிடைப்பதில்லை..!
அனுபவமே கடவுள்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!
Kannadasan Kavithaigal for Students:
சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்
பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!
பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
பக்கத்தில் பங்கு கொள்வோம்!
பாதாதி கேசமும் சீரான நாயகன்
பளிச்சென்று துணைவி வாழ்க!
படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்
பாதியாய்த் துணைவன் வாழ்க!
தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு
என்றெண்ணியே தலைவி வாழ்க!
சமகால யோகமிது வெகுகால யாகமென
சம்சாரம் இனிது வாழ்க!
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்:
சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்
பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!
பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
பக்கத்தில் பங்கு கொள்வோம்!
பாதாதி கேசமும் சீரான நாயகன்
பளிச்சென்று துணைவி வாழ்க!
படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்
பாதியாய்த் துணைவன் வாழ்க!
தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு
என்றெண்ணியே தலைவி வாழ்க!
சமகால யோகமிது வெகுகால யாகமென
சம்சாரம் இனிது வாழ்க!
வைரமுத்து கவிதைகள் |
பாரதியார் கவிதைகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |