கருப்பு காந்தி கவிதை | karuppu Gandhi Kavithaigal
தமிழத்தில் பிறந்த தலைவர்களில் என்னை மிக கவர்ந்தவராக எப்போதும் காமராஜர் இருக்கிறார். அதிகம் படிக்காமலே முதல்வர் பதவிக்கு உயர்ந்தவர், தமிழகத்தில் கல்விக்கு தந்த உத்வேகம், லஞ்ச ஊழல்களில் சிக்காத நேர்மை, இந்திய அரசியலில் அவருக்கிருந்த ஆளுமை இப்படி காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். எனக்கு விபரம் தெரியும் முன்பே காமராஜர் இறந்து விட்டார் என்றாலும் அவர் குறித்த எந்த தகவலையும் ஆர்வமாய் படிப்பேன். அப்படி வாசித்தது தான் கிழக்கு பதிப்பக வெளியீடான காமராஜ்: “கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை” என்கிற புத்தகம். இதனை காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-க்கு அருகாமையில் பகிர்வதில் மகிழ்கிறேன்.
Karuppu Gandhi Kavithai:
தமிழகத்தின் தலைமகன்
நேர்மையின் புதல்வன்
நல்லாட்சியின் வேந்தன்
பாரத ரத்னா வென்ற
தவப் புதல்வன் காமராஜர்….
வரும் தலைமுறைக்கு
நல்லாட்சி செய்திடவும்
நேர்மையாக இருந்திடவும்
மிகப்பெரிய வாழ்வியலை
உதாரணமாய் தந்துவிட்டு
போன பெருமகனாரின்
வாழ்வியலை பின்பற்றுவோம்!
கருப்பு காந்தி வாழ்த்து கவிதை:

துவண்ட வேட்டி கட்டியிருந்தாலும்
தமிழக மக்களின் வாழ்வு பொழிவுற
என்றும் உழைத்த மாமனிதன் காமராஜர்…
பிரதமர் ஆகும் வாய்ப்பிருந்தும்
தனக்கு அது தகுந்த பதவியல்ல
என்றெண்ணி தகுந்தோரை
அமரச்செய்து அழகு பார்த்தவர்…..
பசிக்கு ஆடு மாடு மேய்த்தவர்களை
பசிக்கு உணவிட்டு கல்வி எனும்
பெரும் வரத்தை ஏழைக்குழந்தைகளுக்கு
இலவசமாய் தந்தவர்
அடுத்தவரை அரசனாக்கி
ஆளவைத்து
வரலாறு படைத்தும்
வாடகை வீட்டிலேயே
வாழ்ந்திட்ட ஏழை
கருப்பு காந்தி பிறந்த நாள் வாழ்த்து கவிதை:

அன்னை சிவகாமி
அருந்தவ புதல்வர்,
தன்னை நாட்டுக்கு
தந்திட்ட முதல்வர்,
அண்ணல் காந்தியின்
அஹிம்சை வழியில்,
மண்ணின் சுதந்திரம்
மன்றாடி பெற்றவர்
பள்ளி கல்விக்கு முதற்
படிக்கட்டு கண்டவர்
கள்ளம் கபடமற்ற
கருப்பு காந்தியவர்
கருமைக்கு பெருமை
சேர்த்த
விருது நகரின் விருது.
படித்தவர் போற்றும்
படிக்காத மேதை.
நாட்டு மக்களின்
நலம் ஒன்றே அவருக்கு
துணையானதால்
இல்லறத்தை மறந்து
வாழ்ந்த பிரம்மச்சாரி.
பொன்னு விளையும்
அரசியல் பூமியில்
இவர் தரிசானவர்.
செத்த பின்னும்
சொத்து ஏதும் இல்லாதவர்.
| இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |














