மகள் பற்றிய கவிதை
இன்றைய பதிவில் மகள்கள் பற்றிய கவிதைகளை பற்றி பார்க்க போகிறோம். இந்த உலககத்தில் பிறந்த அனைத்து உயிர்க்கும் அம்மா அப்பா என்றால் பிடிக்கும். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லமால் பிள்ளைகளின் மீது உண்மையான அன்பை காட்டுபவர்கள் தாய் தந்தை மட்டுமே. மேலும், அவர்கள் பட்ட கஷ்டத்தை தனது பிள்ளைகள் பட கூடாது என்று நினைப்பவர்கள். அப்பா என்பவர் அவருடைய பாசத்தை கோபத்திலும், கண்டிப்பிலும் தான் காட்டுவார்கள். இந்த கோபமும், கண்டிப்பும் கூட நாம் வளர வேண்டும் என்பதற்காக தான். இது அவர் போடும் வேஷம் மட்டுமே.அப்பாவின் அன்பையும், பாசத்தையும் வார்த்தைகளால் சொல்ல இந்த ஜென்மம் போதாது. அதனால் நாம் இந்த உலகில் இருக்கும் வரை நம் பெற்றோரை குழந்தை போல் பார்த்து கொள்ள வேண்டும் கடைசி காலம் வரை. இந்த பதிவில் மகள் பற்றிய கவிதை வரிகளை அறிந்து கொள்வோம்.
Makalkal Thina Valathukal :
தான் தடுமாறி விழுந்த இடங்களில் தவறி கூட தன் மகள் விழுந்து விடக்கூடாது என்று நினைப்பவரே தந்தை

Makalkal Thinam :
ஆயிரம் கவலைகள் எண்ணில் இருந்தாலும் அதை அரை நொடியில் மறக்க செய்திடும் ஒரே முகம்தான் இவள்

Makalkal Thina quotes :
என் முகம் பார்க்கும் முன்பே என் குரல் கேட்கும் முன்பே என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஓர் இதயம் என் மகள் மட்டுமே

Makalkal Thina Wishes :
மகளின் வளர்ச்சியை கண்டு மகிழாத தந்தையும் இல்லை !தந்தையின் பாசத்தை கண்டு உருகாத மகளுமில்லை !

Makalkal Thinam :
பெண் பிள்ளைகளை பெற்ற எல்லா அப்பாக்களும் அதிர்ஷ்டசாலிகளே ஏனென்றால் அவர்களுக்கு மட்டுமே இரண்டு தாய்

Makalkal Pattriya Kavithaikal :
அன்பால் அரவணைத்தவள் அதிகாரத்தால் ஆட்கொண்டவள் துன்பத்தை தொலைக்க செய்தவள் இன்பத்தை இருமடங்கு அளிப்பவள் சிரிப்பாள் சினத்தை அளித்தவள் சிணுங்களினால் சிறைபிடித்தவள் என் மகள் மட்டுமே

அப்பா மகள் கவிதை வரிகள் | Appa Magal Kavithai in Tamil
| இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |














