மழை பற்றிய கவிதை | Malai Kavithaigal in Tamil

Advertisement

மழை கவிதை

இந்த உலகில் இயற்கையை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. அதுவும் மழையை பிடிக்காதவர்கள் என்று யாருமில்லை. குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை மழையில் நனையை விரும்புவார்கள். மழையின் தூறலை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். உலகின் வெப்பத்தை தணிக்க கூடியது மழை தான். அந்த அழகான மழை பற்றிய கவிதை (malai kavithai in tamil) வரிகளை இமேஜஸ் மூலம் உங்களுடைய நண்பர்களுக்கு அனுப்ப இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே மழை பற்றிய கவிதைகளை இமேஜஸ் மூலம் பார்க்கலாம்.

மழை கவிதை 10 வரிகள்:

குடை கொண்டு உன்னை
தடுக்க விரும்பாமல் கை
விரித்து தலை உயர்த்தி
உன்னை ரசிக்கிறேன்

உன்னை ரசிக்கத் தெரிந்த
என்னை உரசிப் பார்க்க
வந்தாயே தொட்டு சென்ற
நீ உன் குளிர்ச்சியை மட்டுமே
விட்டு சென்றது ஏனோ

மாதம் மும்மாரி மழை
பொழிந்த காலம் போச்சு
திரைப்படங்கள் கூட இன்று
மழை காட்சியை மறந்து போச்சு

Malai Kavithai in Tamil:

என்னுள் ஆயிரம் கேள்வி,
கோபங்கள் இருந்தாலும்
அத்தனையும் மறந்து போகும்
உன் ஒரு துளி
என் மேல் விழுந்தால்

Malai Kavithai in Tamil

Malai Kavithai in Tamil:

மழை வரும் போதெல்லாம் நனைகிறேன் 
ஒரு நாள் மழையே இல்லாமல் போகுமோ 
என்ற பயத்தில்..!

Malai Kavithai in Tamil

மழை கவிதை:

தாகம் கொண்ட என் இதயத்தில் 
விழுந்த ஒற்றை மழை துளி நீ..!

malai patriya kavithai in tamil

தமிழ் இயற்கை மழை கவிதைகள்:

பெத்த வீட்டுக்கு
முத்து மணி…
புகுந்த வீட்டுக்கு
நெல்லு மணி…

மேகம் கூடி- பெத்த புள்ள!
மின்னல் கொடி
அத்த புள்ள!

மழை எனும் சிங்காரி

என் முற்றத் தரையில்
முத்தச் சத்தம்.

முந்தி வரும் -முதல் துளிகள்.
வாசற் கோலம் கொத்தும்.

உடன் பிறந்த துளிகள்
திரண்டு
நடை பயின்றோடும்

Malai Patriya Kavithai in Tamil:

கண்ணாடி பூக்களாய் 
மண் மீது உடைகின்றாய்  
கண்மூடி திறக்கும் முன்னே 
காணமல் மறைகின்றாய்..!

Malai Patriya Kavithai in Tamil

Malai Patriya Kavithai in Tamil:

மனதில் கஷ்டங்கள் 
ஆயிரம் இருந்தாலும் 
இனிய சாரலோடு 
மழையில் நனையும் போது 
சங்கடங்கள் கூட
சந்தோஷமாக மாறி விடும்.

Malai Patriya Kavithai in Tamil

மழை கவிதை 2 வரிகள்:

நனைதலில் அல்ல
உணர்தலில் இருக்கிறது
மழை

சிலுசிலுவென பொலிகின்றாய்
சிறு துளியாய் விழுகின்றாய்

மஞ்சள் நிற வெயில்
கூட உன்னை பார்த்து
மறைகிறது உன் மீது
உள்ள பயத்தால் தான்
சூரியனும் கரைகிறது

மழையில் நனைந்து-
குளிரில் நடுங்கும்.
குயில் –
குரல் இட வில்லையே 

இதுபோன்று கவிதைகளை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்கள்👉  Quotes in Tamil 

 

Advertisement