மாதங்களில் இது தனிமாதம் இந்த
மார்கழி மாதம் பிரமாதம்
நாகத்தின் நாதன் கண்ணனைத் தொழுது
நங்கையர் பாடும் ஒரு மாதம்
Margazhi Quotes in Tamil | மார்கழி சிறப்பு கவிதை
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மார்கழி மாதத்தின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக மார்கழி சிறப்பு கவிதை பற்றி பார்க்கலாம் வாங்க. மார்கழி மாதம் என்றாலே நம் அனைவரின் நினைவிற்கு வருவது அதிகாலை குளிரும், கோவில்களில் கேட்கும் பக்தி பாடல்களும் மற்றும் அதிகாலையில் எழுந்து வாசலில் கோலம் இடுவதும் தான். இவை அனைத்தையும் தாண்டி, மார்கழி மாதம் என்றாலே அதுவே தெய்வீக வழிபாட்டிற்கு உகந்த மாதம். எனவே, மகத்தான மார்கழி மாதத்தினை கவிதை மூலம் எப்படி கூறலாம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க,
Margazhi Kavithai:
பனி மழையுடன்
இசை மழையும்
பொழிந்திடும் மார்கழி..!
வண்ண கோலங்களும்
வர்ண ஜாலங்களும்
காட்டிடும் மார்கழி..
கோதை கீதங்கள்
கண்ணன் இராகங்களும்
கண்டது மார்கழி..!
Margazhi Month Quotes in Tamil:
மறைக்க தெரியாத
நுனிப்புல்லின் ஒற்றைப் பனித்துளி
சொல்லும் மார்கழியின் மொத்த அழகை.!
Margazhi Kavithai in Tamil:
வாசலில் நீர் தெளித்து
வண்ண கோலமிட்டு
நடுவே பூசணி பூ வைத்து
நிமிர்கையில்
உலகையே கால் அடியில் பார்த்த
மகிழ்ச்சி தோன்றுகிறது.!
மார்கழி கவிதை:
மார்கழி
சில கலைகளையும்
பல காதல்களையும்
இன்று வரை வளர்த்து வருகிறது
மார்கழி குளிர் கவிதை:
ஆதவன் மறைந்து,
மேகம் பொழிந்து,
அரை இருள் சூழ்ந்த
அதிகாலையில்,
குளிர் தென்றல் குடை பிடிக்க
பவணி வருகிறாள் மார்கழி..!
மார்கழி கோலம் கவிதை:
அதிகாலை கோலம் இடும் மங்கையை காணாது
ஓசோனிலும் விழுந்ததோ ஓட்டை..!
Margazhi Quotes in Tamil:
புதிதாய் பிறந்து வரும் மார்கழி, தன்னில்
புத்தம் புது நற்சிந்தனைகள் நன்றாய் தோன்றும்
கதிரவனின் வெம்மையும் கனிவாய் தோன்றும்
காலையிலே மேகக்கூட்டம் பணியில் மூழ்கும்
விதவிதமாய் பறவைகள் சிறகடிக்கும்
விண்ணிலே அதன் கூட்டம் அழகாய் பறக்கும்
அதிகாலை நேரத்தில் அதனை பார்க்கவே
ஆண்டவன் பேரை சொல்லி தொழுக செய்தார்களோ..!
மார்கழி சிறப்பு கவிதை:
மாதங்களில் இது தனிமாதம் இந்த
மார்கழி மாதம் பிரமாதம்
நாகத்தின் நாதன் கண்ணனைத் தொழுது
நங்கையர் பாடும் ஒரு மாதம்
துலங்கும் வைணவர் காலையில் எழுந்து
குளிர்ந்த நீரில் குளிப்பார் – தூயன்
கண்ணன் பேர் சொல்லி பாடி
ஆயிரம் பாடல்கள் படிப்பார் – விடி
வெள்ளி முளைக்கு முன்பே
வேதத்தின் தலைவனை பூஜிப்பார்
வெள்ளெனும் காலையில் கோயிலில் சென்று
துள்ளிய சடங்குகள் முடிப்பார்
மார்கழி தன்னில் தோன்றிடும் நன்னாள்
வைகுந்தம் காட்டும் ஏகாதசி
மண்ணிலும் விண்ணிலும் மகிமை விளங்கும்
ஊர்வலம் வருவான் சந்யாசி
நீராடும் குலமாதரை அழைக்கும்
ஆண்டாள் பாடிய திருப்பாவை
நிகரில்லா தொரு திருவெம்பாவை
தமிழர்களுக் கொரு கைப்பாவை
ஆயிரம் குளங்களும் நீர்நிறைந்திருக்கும்
அறுவடை மாதம் மார்கழி
ஆனந்தக் கோலத்தில் கன்னியரெல்லாம்
ஆடிடும் மாதம் மார்கழியே
தாயினும் பெரியவன் கண்ணன் சொன்னது
மாதங்களில் நான் மார்கழியே
தாங்காக் குளிரில் அவனை அழைத்து
தழுவும் மாதமும் மார்கழியே!
இது போன்ற பல தத்துவங்கள் சார்ந்த பதிவுகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> | QUOTES IN TAMIL |