அர்த்தமுள்ள வாழ்க்கை தத்துவங்கள் | Meaningful Life Quotes in Tamil..!
வாழ்க்கை என்பது நாம் ஒருவர் மட்டும் வாழும் நிகழ்வு கிடையாது. வீடு முதல் படிக்கும் பள்ளி மற்றும் வேலை செய்யும் இடம் என நமக்கு தெரிந்தவர்கள் மற்றும் தெரியாத நபர்கள் என நிறைய நபர்கள் இருப்பார்கள். அதே முறையில் தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அமைகிறது. அதில் நமக்கு நம்பிக்கையான உறவுகளும் இருக்கிறது. அதேசமயம் சில ஏமாற்றத்தினை அளிக்கக்கூடிய உறவுகளும் உள்ளது. இரண்டினையும் ஒப்பிட்டு பார்க்கும் போது பேசுகையில் எளிமையாக இருந்தாலும் கூட நடைமுறையில் இவற்றை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாக தான் இருக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையில் எது அர்த்தமுள்ளது என்றும், எது எது அர்த்தமிள்ளாதவை என்றும் நமக்கு சரியாக தெரிவது இல்லை. அதனால் இன்று அர்த்தமுள்ள வாழ்க்கையினை குறிக்கும் சில தத்துவங்களை படங்களுடன் பார்க்கலாம் வாருங்கள்..!
வாழ்க்கை தத்துவங்கள்:
விதிக்கு ஏற்றாற்போல் நம்மை
மாற்றிக் கொள்ளதான்
முடியுமே தவிர
விதியை மாற்ற
யாராலும் முடியாது..!
Life Quotes in Tamil:
வாழ்க்கையில் எதுவும்
சொல்லிவிட்டு வருவதில்லை
ஆனால் வந்த எதுவும்
ஒருபாடம் கற்றுத்தராமல்
போவதில்லை.!
Valkai Thathuvam Tamil:
சோதனைகளை எதிர்த்து
துன்பங்களை விரட்டுவதில் தான்
வாழ்க்கையின் சாதனை
உள்ளது..!
Valkai Thathuvam Tamil Quotes:
எண்ணம் போல்
வாழ்க்கை..
வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்:
புகைப்படம்
எடுக்கும்போது மட்டும்
புன்னகை என்றாகிவிட்டது
பலரது வாழ்க்கை..
இதுபோன்று தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Quotes in Tamil |