நிலா பற்றிய கவிதைகள்
நாம் வாழ்ந்து கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் நிலவினை காட்டி தான் பிள்ளைகளுக்கு சோறு ஊற்றுவார்கள். ஆனால் தற்போது நிலவினை காட்டி சோறு ஊட்டிய காலங்கள் மாறி தற்போது நிலவினை பார்த்து கவிதைகள் கூறும் அளவிற்கு வந்து விட்டது. ஆனால் நிலாவை பார்த்து கவிதைகள் கூறுவது என்பது ஒரு அருமையான தருணம். ஏனென்றால் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் அமைதியான ஒரு சூழலில் வானத்தில் மேல்நோக்கி இருக்கக்கூடிய அழகான நிலவை பார்த்து கவிதை கூறுவது என்பது மிகவும் அழகாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் நிலவை பற்றிய கவிதை வரிகளை Image உடன் பார்க்க போகிறோம். அதில் உங்களுக்கு ஏதேனும் Image பிடித்து இருந்தால் அதனை நீங்கள் Download செய்து கொள்ளலாம்.
Nila Kavithai in Tamil:
நீ என் எதிரில் இருந்தால்
உன் இமை இமைக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அழகிய கவிதை தொடுப்பேன்..!
நிலா பற்றிய கவிதைகள்:
பல ஆண்களின்
கனவு தேவதையாகவும்
கவிதை தேவதையாகவும்
என்றும் இருப்பது
நிலா மட்டுமே..!
Moon Kavithai in Tamil:
முழு நிலவாய் இருந்த
உன் மீது யார் கண்பட்டு
தேய்பிறை ஆனாய்
தென்றல் பட்டு மீண்டும் வர
காத்திருப்பேன் உனக்காக..!
நிலா கவிதை வரிகள்:
நள்ளிரவில் தனிமை கூட
ஒரு விதமான இன்மை
சேர்க்கிறது நானும் என்
நிலவே நீயும் பேசாமல்
ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளும் போது..!
நிலா கவிதைகள் தமிழில்:
பார்த்தவருக்கு நிலவின் அருமை
தெரிந்ததை விட அதை
ரசித்தவருக்கு தான்
நிலவின் அருமை
என்னவென்று..!
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |