முத்தமிட்டு கட்டில் தொட்டு முடிவதில்லை காதல்! முகம் சுருங்கி, முதுமை கடந்து, கல்லறை சென்றாலும் மறையாததே காதல்!
Muthumai Kadhal Kavithai in Tamil | முதுமை காதல் கவிதை
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முதுமை காதல் கவிதை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். இவ்வுலகில் காதல் உணர்வுகளை அனுபவிக்க முடியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. காதல் என்பது ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பு/பாசம் ஆகும். இவர் இல்லையென்றால் நம்மால் வாழவே முடியாது என்று எவர் ஒருவரிடம் தோன்றுகிறதோ அதுவே காதல். காதல் என்பது இளமையில் வந்து இளமையில் முடிவது இல்லை. இளமையில் தொடங்கி முதுமை வரை தொடர்வது ஆகும்.
எனவே, காதல் என்பது இளமையில் மட்டும் இல்லை. முதுமையிலும் உண்டு என்பதை உணர்த்தும் வகையில் இப்பதிவில் முதுமை காதல் கவிதை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
வயது முதிர்ந்த காதல் கவிதை:
வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும், முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் உலகின் ஆகச் சிறந்த காதலர்கள்!

Muthumai Kadhal Kavithai:
காதலின் வெற்றி திருமணம் அல்ல! தள்ளாடும் வயதில் துணை நிற்பதே காதலின் வெற்றி!

Old Age Love Quotes Tamil:
மங்கிய பார்வை, மடுக்கா செவிகள், கூன் கொண்ட ஊன், உளறும் வாய், உருவம் இழந்த தேகம், நரையடைந்த சிகை, இவையெல்லாம் துறந்து, மீண்டும் காதல் செய்வோம் வா!

முதியோர் காதல் கவிதை:
முதுமை முழுமையாய் ஆட்கொள்ளும் காலத்தில், ஊன்றுகோலுக்கு அவசியம் இருக்காது, உந்தன் அருகாமையில் நான் இருக்கையில்!

Old Age Love Kavithai in Tamil:
உடலுக்கு வயதுண்டு, கால்களுக்கு தளர்வு உண்டு, என் இதயத்திற்கு வலு உண்டு.. உன்னோடு பயணிக்கையில்!

Old Love Kavithai in Tamil:
சாவின் கதவு வாசலில் நிற்கும் நொடியிலும் நீ
என்னை கண்ட நொடியில் கொள்ளும்
வெட்கம் பற்றி கண்களால் உரையாடுவோம்

| இதுபோன்று பலவகையான வாழ்த்துக்கள் Images பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Wishes in Tamil |














