நா. முத்துக்குமார் கவிதைகள் | Na Muthukumar Tamil Kavithaigal
நம்முடைய பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் நம்முடைய இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்னும் அப்துல் கலாம் அவர்களின் வார்த்தைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் நா. முத்துக்குமார். இவர் தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவர். அவரது கவிதைகள் நமது ஒவ்வொரு சூழ்நிலைக்கு பொருந்த கூடியதாக உள்ளது. தனது 2-ஆம் வகுப்பில் எழுத ஆரம்பித்த அவர். அவரது இறுதிக்காலம் வரை எழுதிக்கொண்டு இருந்தார். இவர் உதவி இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா என பன்முக திறமைக்கொண்டவர். 1500 க்கும் மேல் திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார். பத்திற்கும் மேற்பட்ட புத்தகம் எழுதியுள்ளார். அவர் எழுதிய திரைப்பாடலுக்காக பல விருதுகள் பெற்றுள்ளார். அவரின் கவிதைகள் சில உங்களுக்காக..
Na Muthukumar Tamil Kavithaigal:
பாக்கியசாலி
காதல் கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக் கொண்டுடிருக்கிறார்கள்
அதை
வாங்கிச்செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்.
நா முத்துக்குமார் காதல் கவிதைகள்:
காதலித்து கெட்டு போ.
அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட,திகட்ட காதலி
கவிஞர் நா முத்துக்குமார் பற்றிய வரலாறு
Na Muthukumar Tamil Kavithaigal:
சுதந்திரம்:
புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து பறிக்கிறான்
பூனை வளர்க்கும் சுதந்திரம்.
கண்ணதாசன் கவிதைகள் | Kannadasan Kavithaigal
நில் கவனி செல்
மாநகரத்துச் சாலைகளுக்கு
அவ்வப்போது உயிர் கொடுக்கிறது
தொட்டியில் பூத்த
ரோஜாச் செடிகளுடன்
வந்து போகும் மாட்டு வண்டி!
Na.Muthukumar Kavithaigal:
உள்ளமும் புறமும்
அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்கின்றன!
கவிஞர் நா. முத்துக்குமார் எழுதிய புத்தகங்கள்
அப்பாவின் முகம்
அழுது கொண்டிருக்கும்
அம்மாவின் முகம் போல
அவ்வளவு எளிதாகப்
பிள்ளைகளுக்குக்
கிடைத்து விடுவதில்லை
அழுது கொண்டிருக்கும்
அப்பாவின் முகம்.
Na Muthukumar Quotes in Tamil:
வாழ்க்கை
வாழ்க்கை எனும் நதி
மரணம் எனும் கடலில்
கலக்கும் வரை
வெவ்வேறு மேடு பள்ளங்களில்
ஓட வேண்டியிருக்கிறது.
நா.முத்துக்குமார் அப்பா கவிதைகள்:
அம்மா கண்ணீர் வடித்தால்
அப்பா மனசு உடையும்.
அம்மா வீட்டில் இருக்கிறாள்
அப்பா மனசில் இருக்கிறார்
அப்பா வேலைக்குப் போவது,
நமக்கு சோறு வாங்கவே…
அவர் சிரிப்பை மறைப்பார்
நம்மை சிரிக்க வைப்பார்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |