வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பங்குனி உத்திரம் கவிதை 2025

Updated On: April 2, 2025 1:04 PM
Follow Us:
panguni uthiram kavithai
---Advertisement---
Advertisement

பங்குனி உத்திரம் கவிதை

பங்குனி உத்திரம் என்பது முழுமுதற் கடவுளாகிய முருக பெருமானுக்கு உரிய விரதமாக இருக்கிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். இதனில் 12 கை கொண்ட வேலவனுக்காக கொண்டாடப்படும் தினமாக இருக்கிறது. இந்த நாளில் முருகன் கோவிலில் திருவிழாக்கள் நடைபெறும். இந்த நாளை கவிதை மற்றும் வாழ்த்துக்களை இந்த பதிவில் கொடுத்துள்ளோம். அதனைப்பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

பங்குனி உத்திரம் கவிதை:

panguni uthiram short quotes in tamil

ஆகா வந்தது பங்குனி உத்திரம் !
ஆலயம் யாவிலும் மங்கல உற்சவம் !
கோலா கலமாய் நடந்திடும் வைபவம் !
கோடிக் கணக்கில் சேர்த்திடும் புண்ணியம் !
அரங்கனை ஆண்டாள் மணந்ததும் இந்நாள் !
அர்ஜுனன் ஒளியுடன் பிறந்ததும் இந்நாள் !
பரமனை உமையாள் மணந்ததும் இந்நாள் !
சபரியின் ஐயன் பிறந்ததும் இந்நாள் !
கரைந்திடும் பக்தனை காத்திட சிவனும்
காலனைக் காலால் உதைத்ததும் இந்நாள் !
இறையவன் தவமதை கலைத்திட வந்தவன்
மதனனை இறைவன் எரித்ததும் இந்நாள் !
குறமகள் வள்ளியைக் குமரனாம் முருகன்
கைத்தலம் பற்றிய மங்கல திருநாள் !
சிறப்புடன் ராமர், சோதரர் நால்வர்
திருமணம் ஒருங்கே செய்ததும் இந்நாள் !
பழனியில் ஆடிடும் காவடி உற்சவம் !
மயிலையில் அறுபத்து மூவரின் உற்சவம் !
கழனிகள் செழித்திடும் காஞ்சியில் நடக்கும்
கௌரி கல்யாணம் எனுமொரு வைபவம் !
தெய்வம் யாவும் தேர்ந்தெடுத் ததனால்…
தனிச் சிறப்பானது உத்திர திருநாள் !
மெய்யுடன் அன்பாய் நீர்மோர் தானம்
செய்வோம் சேரும் அனேக புண்யம் !

பங்குனி உத்திரம் கவிதை 2025:

பொன்னான நாள் இன்று,
புகழோங்கும் புண்ணிய நாளான பங்குனி உத்திரம்
முருகனும் வள்ளியும் கல்யாணம் செய்த நாள்,

சிவபரமும் உமையும் இந்நாள் மேளம்,
சிறப்புடன் ஆனந்தத் திருநாள் கேளம்.
ராமனும் சீதையும் இணைந்த நாள் இது,
பக்தர்கள் பாடும் பரவச நாள் இது!

திருத்தணிகை முருகா வாழ்த்துதும் வா,
திருக்கல்யாண சிறப்பை போற்றுவோம் நீயும் நானும்.
பக்தியுடன் வாழ்வோம்

Panguni Uthiram Kavithai:

panguni uthiram quotes in tamil

பங்குனி மாதத்தின் புனித நாளே,
பக்தர்களுக்கே பெரும் திருநாளே!
முருகன் வள்ளியுடன் இணைந்த நாள்,
மணமகன் ஆனந்தம் ஊற்றிய நாள்!

சிவனும் உமையும் இணைந்த திருநாள்,
சீரொளி வீசும் புனித நன்னாள்.
ராமனும் சீதையும் கூடும் தருணம்,
பக்தர்களுக்கே பரவசம் தரும்!

தேவகணங்கள் வானில் தேனொழுக,
திருவிழா பாடல் பரவ நீள,
அன்பும் பக்தியும் மலரட்டுமே,
பங்குனி உத்திரம் வாழட்டுமே

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now