பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்
நமது பள்ளி பருவத்தில் ஒவ்வொரு தலைவரையும் பற்றி படித்திருப்போம். அவர்கள் பற்றிய முழு விவரத்தையும் அறிந்து வைத்திருப்போம். அது போல நம் உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.
இவருடைய பிறந்த நாள் இன்றைய தினம் அக்டோபர் 30-ம் தேதி இன்று தான் இந்த உலகத்திற்கு வந்தார். அவருடைய பொன்மொழிகளை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்:
தக்க தலைவர்கள்இல்லையென்றால் மக்களிடையே எழுச்சி உண்டாக்க முடியாது.
உண்மையான தலைவன் மாலையையும் தூக்கு கயிற்றையும் சமமாக மதித்து ஏற்று கொள்வான்.
தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லாரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியபாரிகளாக மாறி விட்டார்கள்.
ஞானிகள் அடக்காமாயிருப்பர் அவர்களின் நிலையை சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை ஏற்படுத்தும்.

வீரம் என்ற குணம் தான் எதிரிகளை கூட பேசும்நிலையை ஏற்படுத்தும், கோழை குணம் அவ்வாறு செய்யாது.
உண்மையாகவே ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று அரசாங்கம் நினைத்தால் விவசாயிகள் நவீன முறையில் விவசாயம் செய்து கிராமங்களில் தங்கி இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர்
எல்லாரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும். நல்லவை வாழ்க என்று சொன்னால் கெட்டவைகள் ஒழிய தான் போகிறது.
எதையும் சொல்லுகின்ற காலத்தில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும் என்ற எண்ணம் நம்மை விட்டு நீங்கி சில வருடங்கள் ஆகின்றன.
அக்கிரம செயல்களை கண்டிப்பதும், நியாயமான செயல்கள் பார்க்கும் போது அதனை அனுதாபம் கொள்வதும் மனிதனுக்கு உரிய உரியமையாகும்.

ஹரிஜனங்கள் பணக்காரர்களாக இருப்பார்கள், அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்மந்தம் செய்து கொள்ளவும், தயாராக இருக்கிறார்கள். இது யாரும் பேசும் கற்பனைக்கு அல்ல. பணால் இல்லாத போது ஏழையை யாரும் சீண்டுவதும் இல்லை. இது நாம் பார்க்கிற உண்மை.
பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன உடலெல்லாம் விழுங்க பெற்று தன் மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பது போலவே மனிதனுக்கு ஆசை அவன் ஓழியமட்டும் இருந்து கொண்டே இருக்கிறது
ஆன்மீகத்தின் பெயரை சொல்லி கோவில் காட்டுவதும், கும்பாபிஷேங்கள் செய்வதும், ருத்ராட்சம் அணிவதும், விபூதி காவியாடை தயாரிப்பதும், மொட்டையடித்து பண்டரமாகி மறைவில் பின், ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல் தீய செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்க வைக்கும் ஒரு கருவியாக கொண்டு நிறைய போலிகள் மறைந்துள்ள காலமாக இருக்கிறது.
| இதுபோன்று கவிதைகள் மற்றும் வாழ்த்துக்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Quotes In Tamil |














