வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ரத்தன் டாடாவின் (Ratan Tata) பொன்மொழிகள்.!

Updated On: October 10, 2024 4:00 PM
Follow Us:
Ratan Tata Quotes in Tamil
---Advertisement---
Advertisement

Ratan Tata Quotes in Tamil | ரத்தன் டாடா தமிழில் மேற்கோள்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இரத்தன் நவால் டாட்டாவின் பொன்மொழிகள் பற்றி (Ratan Tata Quotes in Tamil) பார்க்கலாம். இரத்தன் நவால் டாட்டா அவர்கள், 1937 ஆம் ஆண்டு, டிசம்பர் 28 ஆம் தேதியன்று பிறந்தார். இவர், ஒரு இந்தியத் தொழிலதிபரும், டாட்டா சன் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். 1990 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார். அதன் பிறகு, 2016 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு வரை இடைக்காலத் தலைவராகவும் இருந்தார்.

இவர், இந்தியக் குடிமகனுக்கான மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூசண் பெற்றார்.  அதன் பிறகு,  2008 ஆம் ஆண்டில் இரண்டாவது உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூசண் விருதினையும் பெற்றார். இப்படி இவர் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்துள்ளார். உடல்நல குறைவால் ரத்தன் டாட்டா மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 09 ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். இவர் 86 வயதினில் இறந்தார். எனவே, ரத்தன் டாடா கூறிய பொன்மொழிகள் பற்றி பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ரத்தன் டாடாவின் வெற்றிக் கதை..!

Ratan Tata Quotes in Tamil | ரத்தன் டாடா கவிதை:

ரத்தன் டாடா கவிதை

  • நம் நாடு உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டுமென்றால், நம் தொழில்கள் உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்.
  • புதுமை என்பது போட்டியிலிருந்து வேறுபட்டு, முன்னேற ஒரே வழி.
  • வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நட. ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால், பிறருடன் ஒன்றாக நட.
  • நம் இலக்கு மிகவும் எளிமையானது: நாம் செய்யும் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக இருப்பது
  • நல்ல சேவையை வழங்கினால், நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
  • வாடிக்கையாளர் நம் நிறுவனத்திற்கு வரும் மிக முக்கியமான விருந்தினர். அவர்கள் நம்மை சார்ந்திருப்பதில்லை. நாமே அவர்களை நம்பியிருக்கிறோம். அவர்கள் நம் வேலையில் ஒரு இடையூறு அல்ல. அவர்கள் நம் வேலையின் நோக்கம். அவர்கள் நம் வியாபாரத்தில் ஒரு வெளி ஆட்கள் அல்ல. அதன் ஒரு பகுதி.
  • மிகப்பெரிய ஆபத்து எந்த ஆபத்தையும் எடுக்காமல் இருப்பதுதான்.
  • வியாபாரத்தில், நீங்கள் ஒரு தயாரிப்பை உருவாக்கவில்லை. நீங்கள் ஒரு வாடிக்கையாளரை உருவாக்குகிறீர்கள்
  • முக்கியமான விஷயம் என்னவென்றால், எவ்வளவு சிறிய முன்னேற்றமாக இருந்தாலும், முன்னேற்றம் முக்கியமானது.
  • நான் எப்போதும் நம்புகிறேன், நீங்கள் உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றினால், உங்கள் வாழ்க்கையில் ஒரு நாள் கூட வேலை செய்ய மாட்டீர்கள்.
  • எதிர்காலம் நாம் நுழையும் ஒன்று அல்ல. எதிர்காலம் நாம் உருவாக்கும் ஒன்று.
  • சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பதுதான்.
  • சரியான முடிவு எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை… நான் முடிவை எடுத்த பின்பு அதை சரியானதாக்குவேன்
  • வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் மிக முக்கியம். ECG-ல் கூட, கோடு நேராக சென்றால் நாம் உயிரிழந்துவிட்டதாக அர்த்தம்.
  • நிறுவனத்தின் நலனை கடந்து, சமூகத்தின் பயன் சார்ந்து வணிகம் இருக்க வேண்டும்.
  • உன் மீது எறியப்படும் கற்களை எடுத்து வைத்துக்கொள்; அதைக்கொண்டு அற்புதங்களை கட்டி எழுப்பு
  • வெற்றி பெறுவதற்கு ஒரே வழி தோல்வியை கண்டு அஞ்சாமல் இருப்பது தான்.
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> QUOTES IN TAMIL
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now