பாதுகாப்பு பற்றிய கவிதை | Safety Slogan in Tamil

Advertisement

பாதுகாப்பு கவிதைகள் – Safety Slogan in Tamil Kavithai

வணக்கம் நண்பர்களே.. நமது வாழ்க்கையில் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதாவது பாதுகாப்பு என்பது பொதுவாக ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும். நமது வாழ்கையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது பெரிதும் அவசியமாகக் கருதப்படுகிறது. நாம் நமது செயற்பாட்டிலோ அல்லது வேறு செயல்பாட்டிலோ பாதுகாப்பு செயல்முறைகளை பின்பற்றாவிடின் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். இந்த பின் விளைவுகளானது உயிர்ச்சேதம், அங்கவீன இழப்பு (அங்கக் குறைபாடு அல்லது மாற்றுத்திறனாளிகள்), இயற்கை அழிவு, பொருளாதாரச் சேதம், போன்ற பல அழிவுகளை உருவாக்கலாம்.

இது போன்ற அழிவுகள் பாதுகாப்பு முன் எச்சரிக்கை குறைபாடு காரணமாகவே பொதுவாகக் காணக்கூடியதாக உள்ளன. இருப்பினும் இயற்கை சார்ந்த விபத்தினை நம்மால் எதுவும் செய்ய முடியாது என்றாலும். நமக்கு ஒரு விஷயம் நன்கு தெரிந்து அவற்றில் மிகவும் அலட்சியமாக இருப்பது தான் மிக முட்டாள் தனம் என்று சொல்லலாம். இது போன்ற பல இழப்புகளில் இருந்து முன் எச்சரிக்கையாக அல்லது கவனமாக இருப்பதற்கு பாதுகாப்பு என்ற முன் எச்சரிக்கை செயல்ப்பாட்டை நாம் பின்பற்ற வேண்டும். சரி இந்த பதிவில் பாதுகாப்பு பற்றிய கவிதை safety slogans tamil சிலவற்றை நாம் படித்தறியலாம் வாங்க.

சாலை பாதுகாப்பு கவிதை:

விபத்தினை விதியென்று கொள்வோம்;
ஆராய்ந்து மதிகொண்டு வெல்வோம்!

போதையிலே ஓட்டுனர்
பாதையிலே விபத்து

சாலையிலே சாகச பயணம்
விபத்தாலே அகால மரணம்

தடுக்கப்படவேண்டியது விபத்து;
தடுத்துவிட்டால் இல்லை ஆபத்து.

பெற்றோரின் சாலை விழிப்புணர்வு
பிள்ளைகளின் நல்வாழ்வு

சாலை பாதுகாப்பு கவிதைகள் தமிழ்:

பாதசாரிகளின் உதாசீனம்
ஒட்டுனருக்கோ அதிசிரமம்

பணியிடத்தில் பாதுகாப்பு;
உற்பத்தித்திறனில் அதிகரிப்பு!

சாலையிலே அசுரவேகம்
நிச்சயம் நரகலோகம்

ஆட்டோவில் அதிக மழலைகள்
ஆபத்தினை தேடும் வழிகள்

செல்போனில் இனிய அழைப்பு ஒலி
சுற்றத்தார்க்கு இல்லை காதில் வலி

Safety Slogan in Tamil Kavithai:

பாதுகாப்பு உபகரணங்கள் அணிவது ;
பணியாளர் கடமையில் முதனியானது!

சாலையில் செல்போன் பேச்சு
விபத்தினால் உயிரே போச்சு

அசதிய போக்க கோட்டரா
கண்ணீர் அஞ்சலி போஸ்டரா

பணியாளர் பாதுகாப்பில் விழிப்புணர்வு;
விபத்தை தடுக்கும் முதல் உணர்வு!

விபத்து நடந்துட்டா நூத்தியெட்டு
தூக்கம் வந்துட்டா ஓரம் கட்டு

Safety Slogan in Tamil:

செல்லுல பேசிட்டு வாகன பயணம்
கவனம் சிதறினா நொடியில் மரணம்

வேலையின் மீது கவனம் ;
விபத்தில்லா வாழ்க்கைப்பயணம்

இரவினில் தேவை பிரதிபலிப்பான்
அதுவே நல்ல விபத்து தடுப்பான்

வரிசையான வாகன நிறுத்தம்
அதுதான் சுற்றத்தாரின் சிரமம் நீக்கும்

மூடிக்கிடக்கும் ரயில் பாதை
நுழைந்து கடப்பவனோ பேதை

பாதுகாப்பு கவிதை:

வண்டியில் ஏற்றாதே பெரும் பாரம்
விபத்து நடந்தாலே உயிர் போகும்

வழியில் பழுதான வாகனம்
அவசியம் சிகப்பு முக்கோணம்

பயணம் தோறும் தலைக்கவசமே !
எமனே நெருங்கினாலும் விரட்டிடுமே!!

அவசரம் என்ன அவசரமோ..
தவறினால் உயிரும் திரும்ப வருமோ ?

முறையான வாகன பராமரிப்பு
ஓட்டுனரின் முத்தான பங்களிப்பு

சாலை பாதுகாப்பு கதைகள்:

சாலை விதிகளை கடைபிடிப்போம்
சமூகத்தின் அரணாய் விளங்கிடுவோம்

நான்குமுனை சந்திப்பில் வெட்டிப்பேச்சு
விபத்துக்கு விதை போட்டாச்சு

நெடுஞ்சாலையில் நுழையுது உங்கள் வாகனம்
நிச்சயம் வேண்டுமே தனிக்கவனம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement