Smart Phone Disadvantages Quotes In Tamil
இன்றைய சமுதாயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கைபேசிக்கு அடிமையாகி உள்ளனர். மூன்று அல்லது நான்கு வயது குழந்தைகள் கூட கைபேசிக்கு அடிமையாகி இருக்கிறார்கள். மாணவர்களும் புத்தகத்தை படித்து அறிவை வளர்த்து கொள்வதை விட கைபேசி மூலம் நிறைய விஷயங்களை பார்த்து தங்கள் அறிவை வளர்த்து கொள்கிறார்கள். கைபேசி பயன்படுத்துவதில் நன்மைகள் ஏராளம் இருந்தாலும் தீமைகளும் நிறைந்திருக்கிறது.
அதிக நேரம் செல்போன் உபயோகிப்பதால் கண் பாதிப்புகள் ஏற்படும். மேலும் மனிதர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். சமூக வலைத்தளங்கள், இணைய விளையாட்டுகள் போன்ற செயல்களில் பெரும்பாலான இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். இந்த பதிவில் கைபேசி தீமைகள் பற்றிய கவிதைகளை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாருங்கள்.
தரம் பற்றிய கவிதைகள் | Quality Slogan in Tamil
கைபேசி தீமைகள் கவிதை:
உறவுகளை மறக்க வைத்த உள்ளங்கை கருவி
இது உலகையே அளிக்கும் ஓர் உயிரற்ற பிறவி
செல்போன் தீமைகள் கவிதை:
அனைவரின் கைகளிலும் ஏறிக்கொண்டான்
இவன் ஆறாம் விரலாய் ஒட்டிக்கொண்டான்
கைபேசி தீமைகள் கவிதை:
செல்லும் இடமெல்லாம் நிழலாய் வருகிறான்
கூட்டத்தில் கூட தனிமையைத் தருகிறான்
செல்போன் தீமைகள் கவிதை:
பேஸ்பூக்கில் புதைந்த பேசும் பிணமாய் இருக்கின்றோம்
அருகில் இருப்போரையும் அண்ணாந்து பார்க்க மறக்கின்றோம்
கைபேசி தீமைகள் கவிதை:
கைபேசி இல்லாதவனை காற்று கூட மதிப்பதில்லை
யூடியூப் இல்லாமல் குழந்தை கூட உண்பதில்லை
குடும்பம் பற்றிய கவிதை | Family Quotes in Tamil
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |