மன்னிப்பு கவிதை | Sorry Quotes in Tamil..!

Advertisement

மன்னிப்பு கவிதை | Sorry Quotes in Tamil..!

மனிதர்களுடைய வாழ்க்கையில் இன்பம் மற்றும் துன்பம் என்ற இரண்டும் கலந்த ஒன்று வாழ்க்கையாக அமைகிறது. அதேபோல் அத்தகைய வாழ்க்கையில் சிறிய தவறுகள் செய்வது என்பது இயல்பான ஒன்று. இத்தகைய தவறுகள் பிறர் யாரையும் புண்படுத்தாத அளவிற்கு இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே நமக்கு நெருக்கமானவர்களையோ அல்லது பிறர் யாரையோ பாதிக்கும் வகையில் இருந்தால் அந்த இடத்தில் மன்னிப்பு கேட்பது என்பது முக்கியமான ஒன்று. அதுவே இன்றைய காலத்தில் ஒப்பிட்டு பார்த்து சொல்ல வேண்டும் என்றால் சிறிய சிறிய செயலிற்கு கூட Sorry என்ற வார்த்தையினை பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆகவே இன்று மன்னிப்பு என்பதை பற்றிய கவிதை வரிகளை படங்களுடன் பார்க்கலாம் வாங்க..!

Sorry Kavithai for Amma in Tamil:

அடி பெற்ற பிள்ளையாய் இருந்தேன்,
அன்பு கொட்டிய மழையாய் இருந்தாய்…
உன் வார்த்தைகள் மௌனமாகத் தவழ,
நான் வலி கொடுத்தே சென்றேன்…

உன் கண்களில் நீர் சொட்டியபோது,
என் உள்ளம் கறுப்பாகிவிட்டது…
உனக்கு வந்த வேதனை,
என் இதயம் பிளந்துவிட்டது…

இப்போது அறிகிறேன் என் தவறு,
உன் பாசத்தின் மதிப்பு…
அம்மா, இன்னுமொரு முறை,
உன் மடியில் சாய்ந்திடலாமா?

மன்னிப்பாயா, அம்மா?

மன்னிப்பு கவிதை வரிகள்:

Sorry என்பது
வெறும் வார்த்தை அல்ல
என் கோபத்தை விட
உனது அன்பு தான்
பெரிதென உணர்த்துகிறது..!

mannippu kavithai in tamil

Mannippu Kavithai in Tamil:

செய்யாத தவறுக்கும்
மன்னிப்பு கேட்பது
உன் மீதுள்ள
பயத்தினால் அல்ல
பாசத்தினால்..!

sorry kavithai in tamil

Sorry Kavithai in Tamil:

கோபம் இருந்தால் விட்டுவிடு
ஆத்திரம் இருந்தால் அடித்துவிடு
உன் மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னித்துவிடு
உன் மௌனத்தை மட்டும் விட்டுவிட்டு
என்னிடம் பேசிவிடு..!

sorry quotes in tamil with pictures

Sorry Kavithai in Tamil for Girlfriend:

உன் மனதை புண்படுத்தியதற்கு,
என் மனம் அழுகிறது.
உன் கண்களில் கண்ணீர் வந்ததற்கு,
என் உயிர் துடிக்கிறது.

தவறு எனக்கே தெரியும்,
ஆனால் நேரம் மாறாது…
நான் செய்த தவறை,
நீ மட்டும் மன்னிக்க வேண்டும்..

உன் சிரிப்பை மீண்டும் காண,
என்னைக் கூட மாறி விடுவேன்…
உன் நெஞ்சில் மீண்டும் இடம் கொடு,
மனம் பூரிக்க உன்னால் மட்டும் முடியும்!

மன்னிப்பு கவிதை:

உறவுகள் பிரிந்து போகாமல் இருக்க
செய்யாத தவறுக்கு கூட
நாம் Sorry கேட்பதில்
தவறு இல்லை..!

sorry kavithaigal in tamil

Sorry Kavithaigal in Tamil:

எவ்வளவு சண்டையிட்டாலும்
அடுத்த நிமிடமே
சமாதானப்படுத்துவதற்கு உதவும்
ஒரே வார்த்தை Sorry…

sorry kavithaigal in tamil

Mannippu Quotes in Tamil:

தவறுகள்
நான்
செய்த போது

பிரிவுதந்து
என் தவறை
உணர்த்தினாய் !

இன்று உன் உறவின்றி
தவிக்கிறேன் நான்
இதை நான் உனக்கு எப்படி உணர்த்த தோழி !

செய்த தவறுக்காக
மன்னிப்பு
கேட்கிறேன்

இயற்கை கவிதை வரிகள்

மனித நேயம் பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement