சும்மாவா கிடைத்தது சுதந்திரம் கவிதை | Summava kidaithathu Suthanthiram Kavithai in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சும்மாவா கிடைத்தது சுதந்திரம் கவிதை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நாம் இன்று சுதந்திரமாக நம் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அதற்கு அயராது பாடுபட்ட மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கொடிகாத்த குமரன் உள்ளிட்ட பல்வேறு வீரர்களின் உயிர் தியாகம் காரணம்.
அவர்கள் அன்று நாடு சுதந்திரம் பெற அயராது பாடுபட்டுள்ளார்கள். அவர்கள் பட்ட கஷ்டத்தை நம்மால் ஒரு சதவீதம் கூட பட முடியாது. அந்த அளவிற்கு அவர்கள் இரத்தம் சிந்தி, உன்ன உணவு இல்லாமல் அடிமைப்படுத்தப்பட்டு, பல போராட்டங்களுக்கு பிறகு, நாட்டிற்கு சுதந்திரம் பெற்று கொடுத்தார்கள். எனவே, நாடு சும்மா சுதந்திரம் படவில்லை என்பதிலை நாம் அனைவருமே அறிந்துகொள்ளும் வகையில் சும்மாவா கிடைத்தது சுதந்திரம் கவிதையை உங்களுக்காக பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
அகர வரிசையில் சுதந்திர தின கவிதைகள் 2024..!
சும்மாவா கிடைத்தது சுதந்திரம் கவிதை:
சும்மாவா கிடைத்தது சுதந்திரம்..!
அண்டி வந்தவன் ஆட்சி அமைக்க
ஆண்ட மக்களோ அடிமை ஆகினரே !
சுகமெல்லாம் சுணங்கி போக
துக்கம் மட்டுமே தொண்டைவரை !
கண்விழித்த மக்களோ கவலையில் நிற்க
எதிர்த்தவனெல்லாம் எமலோகம் எனும் நிலை !
இருட்டில் விதைத்த புரட்சி விதை
இமயம் வரை படர்ந்திடவே !
சிந்திய ரெத்தம் அத்தனையும்
சீறிப்பாய்ந்தது சினம்கொண்டு !
ஆயுதம் தாங்கிய அன்னியனும்
அடங்கியே போனான் அதிரடியாய் !
படிப்பினை நமக்கும் அதில் உண்டு –
பாடுபடுவோம் ஒற்றுமை எனும் கொடிபிடித்து !
நாட்டை காக்கும் வீரனாக
மூவர்ண கொடியை மூச்சாக
நெஞ்சோடு பிடித்து நானும் சொல்வேன்
“ஜெய் ஹிந்த்” !
78 -வது சுதந்திர தினத்தின் கருப்பொருள் 2024 என்ன.?
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கவிதை:
விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும்
சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும்
உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை
திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்!
உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு
பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு
மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை
விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்!
அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் தாங்கியாச்சு
உறவெல்லாம் சுட்டவனை ஒசத்தியாக்கி பார்த்தாச்சு
உடமையெல்லாம் இழந்தாலும் –
எதிர்த்துநின்ற தமிழனுக்கு துணிவு தந்தது; சுதந்திரம்
மார்தட்டி ஊரொழிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி
காதலிச்சும் ஊர் பிடிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி
யாரடிச்சு யார் மாண்டுபோயினும் – எவனடிச்சும் சாகா தமிழனுக்கு
எழுச்சிக் கவிதைகள் கொடுத்தது; சுதந்திரம்!
பெண்ணென்றால் போகமென்றே வாழ்ந்தவனும்
அடுப்பூதி சமைப்பவளுக்கு படிப்பேனெனக் கேட்டவனும்
வைப்பாட்டி வைத்திருந்தாலும் வாரிசை மட்டும் வளர்த்தவனும்
திடுக்கிட நிமிர்ந்திட்ட பெண்ணின் பலத்திற்குமாய்
சேர்த்துக் கிடைத்தது; சுதந்திரம்!
உயிருக்கெல்லாம் மண்ணென்ற விலைவைத்து
மண்ணிற்கெல்லாம் ஆங்கிலத்தில் பெயர்வைத்து
ஆடைமுதல் சோறுவரை மாற்றிவிட்ட வெள்ளையனால்
மாறாத பழைய தமிழனின் மானம் தந்தது; சுதந்திரம்!
காக்கை குருவி போல் சுட்டு சுட்டு எறிந்த
வெள்ளையனுக்கு, இறக்கப் போகிறோமெனத் தெரிந்தும்
மார்பை திருப்பிக் காட்டிய தமிழனின்
தியாகத்திற்குக் கிடைத்தது; சுதந்திரம்!
ரத்தநெடி மூக்கு சுரண்டி; செத்தபிணம் செவிட்டில் அறைந்து
முடங்கிக் கிடந்த சோம்பேறி இளைஞனை
அடிமை அடிமை என்ற ஓர்சொல்
அடங்கமறுத்து அடங்கமறுத்து பெற்றது; சுதந்திரம்!
வீட்டில் உறங்ககூட ஊரான் தடுத்ததை எதிர்த்து
வீட்டில் விளைந்ததைகூட ஊரான் பறித்ததை எதிர்த்து
வீட்டில் பேசக்கூட ஊரான் மறுத்ததைஎதிர்த்து
என் வீட்டு தொழுவத்தில் எவன் மாடோ செனையானதை
எதிர்த்து எதிர்த்து எதிர்த்து கிடைத்தது சுதந்திரம்;
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!
சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் பெண்கள் பெயர்கள்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |